வாட்சன் ஓய்வு... அடிச்சு புடிச்சு நாடு திரும்பிய சிஎஸ்கே... ரிவ்யூ மீட்டிங்கில் தோனி செய்யப்போவது 'இது' தான்!?.. அப்ப... ரெய்னா, ஹர்பஜன் நெலம?.. அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர்கள் எல்லோரும் தற்போது அவசர அவரசமாக நாடு திரும்பி உள்ளனர்.

வாட்சன் ஓய்வு... அடிச்சு புடிச்சு நாடு திரும்பிய சிஎஸ்கே... ரிவ்யூ மீட்டிங்கில் தோனி செய்யப்போவது 'இது' தான்!?.. அப்ப... ரெய்னா, ஹர்பஜன் நெலம?.. அதிர்ச்சி தகவல்!

சிஎஸ்கேவின் 10 வருட ஐபிஎல் வரலாற்றில் அந்த அணி முதல் முறையாக பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

அணியில் இருக்கும் மூத்த வீரர்கள் சரியாக ஆடாத காரணத்தால் சிஎஸ்கே இந்த முறை சறுக்கி உள்ளது. அதேபோல் இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணியில் சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தோல்வி அடைந்த நிலையில் வாட்சன் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் வாட்ஸன் ஓய்வை அறிவித்துள்ளார்.

இதனால், சிஎஸ்கே அணி புதிய ஓப்பனிங் இணையுடன் அடுத்த வருடம் ஆட உள்ளது.  ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ள சிஎஸ்கே அணியின் பெரும்பாலான வீரர்கள் இந்தியா திரும்பி உள்ளனர். அவசர அவசரமாக இவர்கள் மொத்தமாக நாடு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் சிஎஸ்கே அணியின் ஆட்டம் குறித்த ரிவ்யூ மீட்டிங் விரைவில் நடத்தப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அணியின் வீரர்கள் எப்படி ஆடினார்கள், வாட்சன் ஓய்வு உள்ளிட்ட பல விஷயங்களை ஆலோசனை செய்ய உள்ளனர்.

அடுத்த வருடம் என்ன செய்ய வேண்டும், அணியில் என்ன மாதிரியான வீரர்களை வைக்க வேண்டும், யாரை எல்லாம் நீக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனை இந்த ரிவ்யூ மீட்டிங்கில் செய்யப்படும் என்று கூறுகிறார்கள். 

இந்த ரிவ்யூ மீட்டிங் அடுத்த வருட தோனி குறித்தும், பயிற்சியாளர் குழு குறித்தும் ஆலோசிக்க உள்ளனர். தோனியும், சில மூத்த வீரர்களும் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

அதேபோல் ரெய்னா குறித்தும், ஹர்பஜன் குறித்தும் இதில் முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. அடுத்த ஐபிஎல் ஏலம் நடக்க இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், விரைவில் இந்த மீட்டிங் நடக்கும் என்கிறார்கள்.

 

மற்ற செய்திகள்