‘இதனால தாங்க எல்லாருக்கும் இவரை பிடிக்குது’.. பதட்டத்தில் இருந்த இளம் வீரர்.. தோனி செய்த காரியம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் தோனி செய்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

‘இதனால தாங்க எல்லாருக்கும் இவரை பிடிக்குது’.. பதட்டத்தில் இருந்த இளம் வீரர்.. தோனி செய்த காரியம்..!

வீட்டுக்குள் கேட்ட பயங்கர சத்தம்... சென்னையில் நடந்த Money heist.. ரைடு விட்ட சென்னை போலீஸ்..!

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ராபின் உத்தப்பா (88 ரன்கள்), ஷிவம் தூபே (95 ரன்கள்) ஆகியோர் அதிரடி காட்ட 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை குவித்தது. இதனை அடுத்து விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சிஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி செய்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்போட்டியில் பெங்களூரு அணியின் இளம் வீரர் பிரபு தேசாய் 18 பந்துகளில் 34 ரன்களை விளாசி சிஎஸ்கேவுக்கு தலைவலி தந்து கொண்டிருந்தார். அப்போது பிராவோ வீசிய 14-வது ஓவரில் பந்து ஒன்றை தூக்கி அடிக்க அது கேட்ச்சானது. மிகவும் சுலபமாக வந்த அந்த கேட்சை இளம் வீரர் முகேஷ் சௌத்ரி தவறவிட்டார்.

CSK Dhoni motivates Mukesh Choudhary after 2 dropped catches

இதனைத் தொடர்ந்து 15-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் கொடுத்த கேட்சையும் முகேஷ் சௌத்ரி தவறவிட்டார். இது சிஎஸ்கே வீரர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீப காலமாக பினிஷிங் ரோலில் தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முன்னதாக நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த பெங்களூரு அணியை கடைசி வரை விளையாடி தினேஷ் கார்த்திக் தான் வெற்றி பெற வைத்தார்.

அதேபோல் நேற்றைய போட்டியிலும் திடீரென தினேஷ் கார்த்திக் அதிரடி காட்ட ஆரம்பித்தார். அதுவும், முகேஷ் செளத்ரி வீசிய 17-வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர், 1 பவுண்டரில் விளாசினார். அதனால் ஆட்டம் மெதுவாக பெங்களூரு பக்கம் திரும்புவது போல் இருந்தது. ஏற்கனவே தினேஷ் கார்த்திக் கேட்சை தவறவிட்டு, பின்னர் பவுலிங்கிலும் ரன்களை முகேஷ் சௌத்ரி வாரி வழங்கினார். இதனால் சமூக வலைதளங்களில் அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த சூழலில் பதற்றமாக இருந்த முகேஷ் சௌத்ரியிடம் சென்ற தோனி, அவரின் தோள் மீது கைபோட்டு அறிவுரை வழங்கினார். இரண்டு முக்கியமான கேட்ச்களை தவறவிட்ட பின்பும், பொறுமையாக இளம் வீரரை தோனி அரவணைத்து சென்றது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

 

"ஆஹா.. இது அதுல்ல.".. 10-ம் வகுப்பு தேர்வில் மாணவன் எழுதிய புஷ்பா பட டயலாக்?.. வைரல் புகைப்படம்..!

 

CRICKET, IPL, CSK, MS DHONI, MUKESH CHOUDHARY, IPL 2022, பெங்களூரு அணி, சிஎஸ்கே, சென்னை சூப்பர் கிங்ஸ்

மற்ற செய்திகள்