"Definitely not!".. தோனி ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?.. அவரோட கணக்கு 'இது' தான்!.. மெர்சலான ரசிகர்கள்!.. போடுறா வெடிய!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்த சீசனிலும் ஆடுவேன் என தோனி திட்டவட்டமாக அறிவித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார். இதன் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வருகின்றன.
அதில் முக்கியமாக சிஎஸ்கே அணி கோப்பை வெல்லாதது தான் காரணம் என கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இன்னும் சில காரணங்களும் கூறப்படுகிறது.
தோனி அடுத்த சீசனில் கூட ஓய்வு பெறுவாரா? எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2019 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் தான் தோனி தன் கடைசி சர்வதேச போட்டியில் ஆடி இருந்தார்.
அதன் பின் அவர் 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க ஆர்வமாக இருந்தார். ஆனால், அதற்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் உலகக்கோப்பை வெற்றியுடன், ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெற நினைத்த தோனி 2020 ஐபிஎல் தொடருக்கு முன் இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு பதிவு மூலம் தன் சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவித்தார். அது பலருக்கும் ஏமாற்றமாக இருந்தது.
அதன் பின் தோனி 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே, தோனி தன் கடைசி ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம் ஆடி, சிஎஸ்கே அணியை ஐபிஎல் கோப்பை வெல்ல வைத்து ரசிகர்களை குஷிப்படுத்துவார் என் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சிஎஸ்கே அணியும், தோனியும் எதிர்பார்த்ததை போல ஆடவில்லை. சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. தோனி தனிப்பட்ட முறையில் பேட்டிங்கில் தடுமாறினார். அவரால் முன்பு போல அதிரடி ஆட்டம் ஆட முடியவில்லை.
இத்துடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்த சீசனில் நிச்சயம் சிஎஸ்கே அணிக்காக ஆடுவேன் என அறிவித்து அதிர வைத்தார்.
அதற்கு என்ன காரணம் என்பது பற்றி விவாதம் நடைபெற்று வருகிறது. முக்கியமாக சிஎஸ்கே அணி இந்த சீசனில் ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை. பிளே-ஆஃப் கூட செல்லவில்லை. சிஎஸ்கே அணியில் பல்வேறு குழப்பங்கள் உள்ளது.
அணியை மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த நிலையில், சிஎஸ்கே அணியை விட்டு விட்டு செல்ல தோனி விரும்பவில்லை.
மேலும், சர்வதேச போட்டி ஓய்வைப் போல, ஐபிஎல் தொடரிலும் ரசிகர்கள் இல்லாமல் அவர் ஓய்வை அறிவிக்க விரும்பாமல் இருக்கலாம். தோனியின் வளர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்களின் பங்கு மிகவும் அதிகம். அவர்கள் முன்னிலையில் அவர் ஓய்வை அறிவிக்க விரும்பி இருக்கலாம்.
அதுமட்டுமின்றி, சிஎஸ்கே அணியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் அனைத்து வீரர்களையும் விடுவித்து ஏலத்தில் புதிய வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் ஒரு சீசனில் மட்டுமே அணியில் நீடிக்க முடியும். அதன் பின் மெகா ஏலம் நடக்கும் போது அவர்களை விடுவிக்க நேரிடும்.
எனவே, தோனி இருக்கின்ற வீரர்களுடன், சில புதிய வீரர்களை மட்டும் தேர்வு செய்து சிஎஸ்கே அணியை மாற்றி அமைக்க உள்ளார். இந்த பணியை சரியான ஆள் அவர் தான். அவரைத் தாண்டி வேறு யாரும் சிஎஸ்கே அணியை சரியாக புரிந்து கொள்ள முடியாது.
அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி கோப்பை வெல்லும் பட்சத்தில் அல்லது குறைந்தபட்சம் சிஎஸ்கே ரசிகர்கள் மைதானத்தில் இருக்கும் நிலையில் மட்டுமே தோனி ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது. சிலர் 2022 ஐபிஎல் தொடர் வரை தோனி ஐபிஎல் தொடரில் ஆடுவார் எனவும் கூறுகிறார்கள்.
மற்ற செய்திகள்