"இது எல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லங்க.." கொதித்த சிஎஸ்கே ரசிகர்கள்.. முதல் ஓவரிலேயே நடந்த 'சர்ச்சை'..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தற்போது மோதி வரும் போட்டியில், முதல் ஓவரிலேயே நடந்த சம்பவம் ஒன்று, பெரிய அளவில் சர்ச்சையை உண்டு பண்ணி உள்ளது.
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், தற்போதைய சீசனில் இதுவரை 11 போட்டிகளில் ஆடி, நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம் 8 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே, மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
இக்கட்டான நிலையில் சிஎஸ்கே..
அப்படி அவர்கள் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட, மற்ற போட்டிகளின் முடிவுகளை பொறுத்து தான், சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்வது கூட உறுதியாகும் என்ற நிலையும் உள்ளது. இதனால், பல விஷயங்கள் சிஎஸ்கேவுக்கு சாதகமாக அமைந்தால் தான், அவர்களால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதி வருகிறது.
சர்ச்சையை கிளப்பிய முடிவு..
இந்த போட்டியில், நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் சென்னை அணி களமிறங்கி இருந்தது. இதனிடையே, இந்த போட்டிக்காக டாஸ் போடுவதற்கு முன்பாக, மைதானத்தில் பவர் கட் மற்றும் லைட் ஒன்று வேலை செய்யாத காரணத்தினால், சற்று தாமதமாகவே டாஸ் போடப்பட்டிருந்தது. இதனையடுத்து, போட்டி தொடங்கிய பிறகு, பவர் கட் இல்லை என்பதால், DRS முறையும் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
கோபத்தில் சென்னை ரசிகர்கள்
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், சிஎஸ்கே தொடக்க வீரர் டெவான் கான்வே, தான் சந்தித்த முதல் பந்தில் எல்.பி.டபுள்.யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து, ரீப்ளேயில் அவர் அவுட்டில்லை என்பது போல தான் தோன்றியது. இதனைக் கண்ட சிஎஸ்கே ரசிகர்கள், இணையத்தில் கோபத்துடன் கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.
ஒரு வேளை DRS முறை இருந்திருந்தால், கான்வே அவுட்டில்லை என்று கூட அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். கான்வே அவுட்டானதும், 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே தடுமாறியது. 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை சிஎஸ்கே இழந்த பிறகு தான், பவர் பிரச்சனைகள் சரியாகி, மீண்டும் DRS முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் DRS அப்பீலையும் வீரர்கள் மேற்கொள்ளலாம்.
இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும், மும்பை அணி பேட்டிங் செய்யும் போதும், இது போல முதல் சில ஓவர்கள் DRS இல்லாமல் ஆடுவார்களா என்ற கேள்வியையும் முன் வைத்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்