'கிரவுண்ட்ல ஏகப்பட்ட பிரச்சனை இருந்துச்சு...' ஆனா 'அந்த மனுஷனுக்காக' தான் நாங்க 'வெறியோட' விளையாடினோம்...! - 'சிஎஸ்கே' வீரர் நெகிழ்ச்சி...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளதுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த நிலையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தங்கள் அணி வெற்றி பெற்றது குறித்து கூறுகையில், “இந்த சீசனில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை முன்னரே இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நாங்கள் நிறையை ஏற்ற, இறக்கங்களை சந்தித்திருக்கிறோம். இந்த சீசனை நாங்கள் சிறப்பானதாக நிறைவு செய்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளோம். என்னுடைய 4-வது ஐபிஎல் பைனலில் நான் சாம்பியானான அணியின் பக்கம் நிற்பதில் மன நிறைவுடன் இருப்பதாக உணர்கிறேன். இறுதிப் போட்டியின் போது மைதானத்தில் பனி படர்ந்திருந்தது. இருந்தாலும் அந்த அழுத்தத்தை நாங்கள் நன்றாகவே எதிர்கொண்டோம். எங்களுடையே முந்தையே அனுபவங்களே அதற்கு காரணம்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விக்கெட் எடுப்பதற்காக தவம் இருந்தோம். ஏனெனில் அவர்களது பேட்டிங் வரிசையில் லோயர் ஆர்டர் சிறப்பான பங்களிப்பை தரவில்லை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.
கடந்த சீசன் எங்களுக்கு மோசமான சீசன் தான். ஆனால், அதேயெல்லாம் மறந்து இந்த சீசனில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை ஆரம்பத்திலேயே கொண்டிருந்தோம். நாங்கள் அனைவரும் எங்கள் அணியின் கேப்டன் தோனிக்காக விளையாடினோம்” என சாஹர் கூறியுள்ளார்.
இந்த வருடத்திற்கான ஐபிஎல் சீசனின் சென்னை அணிக்காக மொத்தம் 15 போட்டிகளில் விளையாடிய தீபக் சாஹர் 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் ஒரே போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்