RRR Others USA

சூப்பர் அப்டேட் கொடுத்த சிஎஸ்கே கோச்.. அப்படின்னா அடுத்த மேட்ச்ல இவரை பாக்கலாம் போலயே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் அணியில் இணைவது குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தகவல் தெரிவித்துள்ளார்.

சூப்பர் அப்டேட் கொடுத்த சிஎஸ்கே கோச்.. அப்படின்னா அடுத்த மேட்ச்ல இவரை பாக்கலாம் போலயே..!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

இதனை அடுத்து நேற்று நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியும், லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து இரு போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் ஆடம் மில்னே, க்றிஸ் ஜோர்டன், தீபக் சஹார் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இன்னும் அணியில் இணையாமல் உள்ளனர். இது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசியுள்ளார் அதில் ஆடம் மில்னே சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் அணியில் இணைந்து விடுவார். அதேபோல் கிறிஸ் ஜோர்டனும் சீக்கிரம் அணிக்கு திரும்பி விடுவார். அதேபோல் தீபக் சஹாரும்தான்’ என ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

CSK coach gives big update on Deepak Chahar fitness

காயம் காரணமாக ஓய்வில் இருந்த தீபக் சஹார் தற்போது வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்த போட்டோவை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருந்தார். இந்த சூழலில் பயிற்சியாளார் ஸ்டீபன் பிளமிங்கும் தீபக் சஹார் குறித்து பேசியுள்ளார். அதனால் சீக்கிரம் அவர் சிஎஸ்கே அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

CSK, IPL, STEPHENFLEMING, DEEPAKCHAHAR

மற்ற செய்திகள்