"சீக்கிரமாவே அவரு வருவாரு.." சிஎஸ்கே Coach சொன்ன குட் நியூஸ்.. ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்க.. உற்சாகத்தில் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த ஐபிஎல் சீசனில், நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு ஐபிஎல் தொடரில் கடுமையாக திணறி வருகிறது.

"சீக்கிரமாவே அவரு வருவாரு.." சிஎஸ்கே Coach சொன்ன குட் நியூஸ்.. ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்க.. உற்சாகத்தில் ரசிகர்கள்

இதுவரை சிஎஸ்கே ஆடியுள்ள 8 போட்டிகளில், இரண்டில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

இனியும் 6 லீக் போட்டிகள் மீதமுள்ள நிலையில், அனைத்திலும் வெற்றி பெற்றால் தான், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கடும் நெருக்கடியில் சிஎஸ்கே உள்ளது.

சொதப்பும் சிஎஸ்கே..

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து இடங்களிலும் தடுமாற்றம் காணும் சிஎஸ்கே, தங்கள் அணியிலுள்ள பல ஓட்டைகளை சரி செய்து மீண்டு வந்தால் தான், தொடர்ச்சியாக வெற்றிகளை குவிப்பதை பற்றி யோசிக்க முடியும். அதிலும் குறிப்பாக, 8 போட்டிகளில் சுமார் 10 க்கும் மேற்பட்ட கேட்ச் வாய்ப்பினை தவற விட்டுள்ளது. அதே போல, அனுபவமில்லாத பந்து வீச்சும் சென்னை அணியின் தலைவலியாக  உள்ளதாக ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

காயம் தான் அவங்களுக்கு தலைவலி..

இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க, அடுத்தடுத்து சில முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறியதும் சென்னை அணிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தி இருந்தது. முதலாவதாக, ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி 14 கோடி ரூபாய் கொடுத்து எடுத்த தீபக் சாஹர், காயம் காரணமாக ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகி இருந்தார்.

இவருக்கு அடுத்தபடியாக, வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவும் காயம் காரணமாக ஒரு போட்டியுடன் நடையைக் கட்ட, தற்போது மொயீன் அலி மற்றும் ராயுடு ஆகியோர் காயமடைந்ததாக வெளியான தகவல், சிஎஸ்கே ரசிகர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள் ஆக்கி இருந்தது. கடந்த இரண்டு போட்டிகளில் மொயீன் அலி களமிறங்கவில்லை.

ஸ்டீபன் பிளமிங் கொடுத்த அப்டேட்

அதே போல, பஞ்சாப் அணிக்கு எதிராக அதிரடி காட்டி இருந்த ராயுடு, அந்த போட்டியின் போது காயத்தால் அவதிப்பட்டிருந்தார். இந்நிலையில், இருவரின் நிலை பற்றியும், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார். "மொயீன் அலிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. அப்படி எலும்பு முறிவுகள் எதுவும் இல்லாதால், அடுத்த 7 நாட்களில் அவர் குணமடைந்து விடுவார் என நம்புகிறோம்.

ராயுடுவுக்கும் காயம் ஏற்பட்டது உண்மை தான். ஆனால், அவர் தற்போது நல்ல முறையில் தயாராகி வருகிறார். அவரது உடற்தகுதியில் பெரிய பிரச்சனை ஒன்றுமில்லை. இதனால், சிறிய ஓய்வுக்கு அவர் நிச்சயம் களமிறங்குவார்" என ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

AMBATI RAYUDU, MOEEN ALI, STEPHEN FLEMING, ஸ்டீபன் பிளமிங், ராயுடு, மொயீன் அலி

மற்ற செய்திகள்