RRR Others USA

"பிட்ச்ல நயாகரா அருவி மாதிரி கொட்டுது.. இதுல எங்கிட்டு".. CSK தோல்விக்கு இதுதான் காரணமா? போட்டு உடைத்த பிளெமிங்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டாவது போட்டியிலும் தோல்வியை  சந்தித்துள்ளது. இந்நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தோல்விக்கான காரணம் குறித்து பேசியிருக்கிறார்.

"பிட்ச்ல நயாகரா அருவி மாதிரி கொட்டுது.. இதுல எங்கிட்டு".. CSK தோல்விக்கு இதுதான் காரணமா? போட்டு உடைத்த பிளெமிங்..

ஐபிஎல் 2022

உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த வாரம் துவங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.

CSK coach compares dew in Mumbai to Niagara Falls

இரண்டாவது போட்டி

இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்த்து நேற்று விளையாடியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து சென்னை அணியின் உத்தப்பா மற்றும் கெய்க்வாட் ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினர்.

அபாரம்

கெய்க்வாட் 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றினாலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் காட்டிய அதிரடியின் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 210 ரன்களை எடுத்தது.

CSK coach compares dew in Mumbai to Niagara Falls

ஆனால், அதே அதிரடியை லக்னோ அணி வீரர்களும் தொடரவே, சென்னை அணியின் நிலைமை மோசமானது. கடைசி இரண்டு ஓவர்களுக்கு 34 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் ஷிவம் துபே பந்துவீச வந்தார். அந்த ஓவரில் 2 சிக்சர் 2 பவுன்டரிகள் என 25 ரன்களை ஒரே ஓவரில் வெற்றியை நெருங்கியது லக்னோ அணி. 6 பந்துக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இறுதி ஓவர் முகேஷ் சவுதிரியிடம் ஒப்படைத்தார் சென்னை கேப்டன் ஜடேஜா.

அவர் முதல் இரண்டு பந்துகளையுமே வொயிடாக வீச, அடுத்த பந்தை ஆயுஷ் பதோனி சிக்ஸ் அடித்து லக்னோ வெற்றியை உறுதி செய்தார். இதன்மூலம் 19.3 ஓவர்களேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

அருவி மாதிரி

சென்னை அணியின் தோல்வி குறித்து பேசியுள்ள அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்,"சிஎஸ்கே அணிக்கு ஆட்டம் எந்த நேரத்திலும் சாதகமாக இல்லை. பிட்ச்சில் Dew, நயாகரா அருவி போல இருந்ததுதான் உண்மை. பந்தை பவுலர்களால் சரியாக பிடிக்க முடியவில்லை. பந்தில் கிரிப் கிடைக்கவில்லை. போட்டியை ஒரு ஓவர்தான் மாற்ற போகிறது என்று எங்களுக்கு தெரியும். அதையும் அவர்களும் கணித்து இருப்பார்கள் என்று தெரிகிறது. அவர்களும் திறமையாக விளையாடினர். எங்களது ஸ்கோர் போதும் என நினைத்திருந்தோம். ஆனால், தற்போதைய தொடரில் இரண்டாவது பேட்டிங் செய்பவர்களுக்கே மைதானம் சாதகமாக இருந்துவருகிறது" என்றார்.

CSK coach compares dew in Mumbai to Niagara Falls

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரையில் நடைபெற்றுள்ள 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

IPL, IPL2022, CSK, LSG, FLEMMING, ஐபிஎல், சென்னை, சிஎஸ்கே, லக்னோ

மற்ற செய்திகள்