‘அடி தூள்..!’ சிஎஸ்கே உரிமையாளர் சொன்ன ‘சூப்பர்’ தகவல்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் இந்தியா திரும்பியதும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடந்த 14-வது சீசன் ஐபிஎல் (IPL) தொடரின் இறுதிப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸை (KKR) வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி கோப்பையை கைப்பற்றியது.
இதனை அடுத்து ஐபிஎல் கோப்பையை தியாகராய நகரில் உள்ள பெருமாள் கோவிலில் வைத்து சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் (Srinivasan) சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் முடிவடைந்ததும், ஐபிஎல் கோப்பையுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை (MK Stalin) சிஎஸ்கே கேப்டன் தோனி சந்திக்க உள்ளார். இதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
டி20 உலகக்கோப்பையில் விளையாட உள்ள இந்திய அணி சிறப்பாக உள்ளது. அதற்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது ஒரு சிறந்த தேர்வு. தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை, சிஎஸ்கே இல்லாமல் தோனியும் இல்லை.
அதனால் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்பது பிசிசிஐயின் முடிவைப் பொறுத்தே அமையும். ஆனால் சிஎஸ்கே அணியில் தோனி நிச்சயம் இடம்பெறுவார். சுரேஷ் ரெய்னா இடம்பெறுவாரா என்பது குறித்து இப்போது ஏதும் சொல்ல இயலாது’ என சீனிவாசன் தெரிவித்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்