“ஒரு ஓவர்ல 4 சிக்ஸ் போனாலும் பரவாயில்ல.. ஆனா இதை மட்டும் எப்படியாவது பண்ணிடுங்க”.. பவுலர்களுக்கு தோனி கொடுத்த வேறலெவல் அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபந்து வீச்சாளருக்கு கொடுக்கும் அறிவுரை குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பகிர்ந்துள்ளார்.
Also Read | இதனாலதான் CSK கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகினாரா?.. சீக்ரெட்டை உடைத்த தோனி..!
ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டியில் நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் 85 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியை பொறுத்தவரை நடராஜன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இதில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை முகேஷ் சௌத்ரி 4 விக்கெட்டுகளும், மிட்சல் சான்ட்னர் மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, ‘பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி எங்களுக்கு நல்ல இலக்கை நிர்ணயித்தனர். ஆனால் நாங்கள் முதல் 2 ஓவர்களில் 25 ரன்கள் விட்டு கொடுத்தோம். அதனால் கொஞ்சம் அழுத்தமான சூழலுக்கு பந்துவீச்சாளர்கள் தள்ளப்பட்டனர்.
ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் சென்றாலும் கவலைப்படாதீர்கள், எஞ்சிய 2 பந்தில் ரன்கள் செல்ல விடாமல் கட்டுப்படுத்தங்கள் என எப்போதும் பவுலர்களிடம் நான் சொல்வேன். மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடும் போது, இந்த இரு பந்துகள் பெரிதும் உதவியாக இருக்கும். என்னுடைய இந்த கருத்தை மற்றவர்கள் ஏற்பார்களா என தெரியாது. எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் 7-வது ஓவரிலிருந்து 14-வது ஓவர் வரை கட்டுக்கோப்பாக பந்துவீசினர்’ என தோனி கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்