முதல் மேட்சே பிராவோ ‘வேறலெவல்’ சம்பவம் பண்ணிட்டாரே.. இதுவரை யாரும் நெருங்காத ‘மும்பை’ வீரரின் மிகப்பெரிய சாதனை சமன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன்மூலம் மலிங்காவின் மிகப்பெரிய சாதனையை சிஎஸ்கே வீரர் பிராவோ சமன் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடர் 15-வது சீசனின் முதல் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தோனி 50 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
குறைந்த டார்கெட்டை நிர்ணயித்திருந்தாலும், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் கொல்கத்தாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக அந்த அணியின் அனுபவ ஆல்ரவுண்டர் பிராவோ சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணியின் முன்னாள் வீரர் மலிங்காவின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்துள்ளார்.
அதில் ஐபிஎல் தொடரில் 122 போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்கா 170 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறார். இதை நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பிராவோ சமன் செய்தார். இதுவரை 151 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ 170 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஆரம்ப காலத்தில் மும்பை அணியில் விளையாடினாலும் அதற்கு அடுத்து தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக பிராவோ விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்