அப்புறம் என்னப்பா கப் நமக்கு தான்னு அறிவிச்சிடலாமா?.. பிராவோ-வின் மாஸ் என்ட்ரி.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய பவுலிங் பயிற்சியாளருமான பிராவோ சென்னைக்கு திரும்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

அப்புறம் என்னப்பா கப் நமக்கு தான்னு அறிவிச்சிடலாமா?.. பிராவோ-வின் மாஸ் என்ட்ரி.. வீடியோ..!

                                 Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இந்தியா அந்த மேட்ச்ல தோற்க என் வீடியோ தான் காரணமா?".. கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்.. அஸ்வின் கொடுத்த பதிலடி!!

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது.

இந்நிலையில் பயிற்சியில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தோனி இன்று சென்னை வந்திருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு சென்னையில் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

பிராவோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் தல தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ கூட்டணி எப்போதும் ஸ்பெஷல் தான். பல தாதாவான அணிகளையே ரவுண்டு கட்டி வெற்றியை தங்களது வசமாக்கிய டீம் அது. இந்த நிலையில் கடந்த ஐபிஎல் ஏலத்தில் இருந்து பிராவோ மற்றும் ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்தது. இதனால் ரசிகர்கள் பெரும் சோகம் அடைந்தனர். அந்த சூழ்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் பிராவோ. இருப்பினும் CSK அணியின் பவுலிங் பயிற்சியாளராக பிராவோ நியமிக்கப்பட்டிருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

கோச்

ஐபிஎல் தொடரில் இதுவரையில் 161 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ 183 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். டெத் ஓவர்களில் பந்துவீச பிராவை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்ற சூழ்நிலை பல ஆண்டுகளாக நீடித்தது. பரபரப்பான கட்டத்தில் லெந்த் மற்றும் பேஸில் வேரியேஷன்கள் மூலம் எதிரணியை நிலைகுலைய செய்யும் பிராவோவின் மேஜிக் அவர் பயிற்சியாளராக இருக்கும் போதும் நடைபெறுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் பிராவோ சென்னைக்கு திரும்பியிருக்கிறார். அதில் "வணக்கம் சேம்பியன் ஆன் ஹிஸ் வே" என்கிறார். இதனிடையே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியும் சென்னை திரும்பியுள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read | "டிவி ரிமோட்-னு ஒன்ன கண்டுபிடிக்காமலேயே இருந்திருக்கலாம்".. நெட்டிசன்களை யோசிக்க வச்ச ஆனந்த் மஹிந்திராவின் போஸ்ட்..!

CRICKET, CSK BOWLING COACH, BRAVO, IPL 2023

மற்ற செய்திகள்