தமிழ்-ல பட்டய கிளப்பும் ரஹானே.. ஹர்பஜனை மிஞ்சிடுவாரு போலயே.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேனான அஜிங்கியா ரஹானே தமிழில் சில வார்த்தைகளை பேசும் வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ்-ல பட்டய கிளப்பும் ரஹானே.. ஹர்பஜனை மிஞ்சிடுவாரு போலயே.. வைரலாகும் வீடியோ..!

                                                         Image Credit : CSK | Twitter 

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னையில் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

CSK batter Ajinkya Rahane speaking Tamil video goes viral

Image Credit : CSK | Twitter

ரஹானே

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான ரஹானே கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் ஆறுமுகம் ஆனார். பின்னர் 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆறுமுகம் ஆன ரஹானே கடினமான சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து அணியை வழிநடத்துபவர். இதுவரையில் 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 4931 ரன்களையும் 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2962 ரன்களையும் 20 டி20 போட்டிகளில் விளையாடி 375 ரன்களையும் எடுத்திருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ரஹானேவை ஏலத்தில் எடுத்திருந்தது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அபாரமாக ஆடி பல சரித்திர இன்னிங்க்ஸை கொடுத்த ரஹானே ஐபிஎல் தொடரில் பல இடங்களில் அவருக்கான வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ரஹானேவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது குறித்து ரசிகர்கள் இப்போதே பேசி வருகின்றனர்.

CSK batter Ajinkya Rahane speaking Tamil video goes viral

Image Credit : CSK | Twitter

வீடியோ

பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது உண்டு. முன்னாள் வீரர் ஹர்பஜன் உள்ளிட்ட சில வீரர்கள் தமிழில் போடும் ட்வீட்கள் உடனடியாக வைரலாவது வாடிக்கை. இந்த சூழ்நிலையில் இந்த லிஸ்டில் இணைந்திருக்கிறார் அஜிங்கியா ரஹானே. சென்னை அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது. அதில் ரஹானே, வணக்கம், சாப்டிங்களா, நீங்க எப்படி இருக்கீங்க, போய்ட்டு வர்றேன் ஆகிய வார்த்தைகளை பேசுகிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

 

RAHANE, CSK, VIDEO, IPL

மற்ற செய்திகள்