இந்த ஐபிஎல் சீசனோட ‘பெஸ்ட்’ கேட்ச் இதுதான்யா.. சூப்பர்மேன் போல் பறந்து பிடித்த CSK வீரர்.. புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட் ஜாம்பவான்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அம்பட்டி ராயுடு டைவ் அடித்து பிடித்த கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தோனி சொன்ன அந்த அட்வைஸ்”.. RCB அணிக்கு எதிரா சிக்சர் மழை பொழிந்த CSK சிவம் துபே சொன்ன சீக்ரெட்..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிவம் துபே 95 ரன்களும், ராபின் உத்தப்பா 88 ரன்களும் எடுத்து அசத்தினார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இதில் மகேஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், பிராவோ மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதில் சிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி, பெங்களூரை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இது சிஎஸ்ஐ ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இப்போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு பிடித்த கேட்ச் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அதில், ஜடேஜா வீசிய 16-வது ஓவரின் 4-வது பந்தை பெங்களூரு அணியின் ஆகாஷ் தீப் எதிர்கொண்டார். அவர் கவர் பில்டிங் திசையில் பந்தை தட்டி விட்டார். அப்போது பில்டிங் செய்து கொண்டிருந்த அம்பட்டி ராயுடு டைவ் அடித்து அந்த கேட்சை பிடித்தார்.
பந்து கைக்கு எட்டாத போதிலும் சூப்பர்மேன் போல் டைவ் அடித்து கேட்சை பிடித்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதைப் பார்த்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் இயன் பிஷப், இந்த ஐபிஎல் தொடர் மிகச்சிறந்த கேட்ச் இதுதான் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Ambati Rayudu Just took the catch of the season #Rayudu #CSKvsRCB #IPL2022 #Cskforever @roydoaumbeti pic.twitter.com/ukI9ynwBXK
— Mr.shaun❤🇮🇳 (@Shaun81172592) April 12, 2022
Ambiti Rayudu just took the catch of the season!!!
— Ian Raphael Bishop (@irbishi) April 12, 2022
மற்ற செய்திகள்