Veetla Vishesham Mob Others Page USA

விபத்தில் சிக்கிய கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் சூப்பர் கார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சூப்பர் கார் விபத்தை சந்தித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், ரொனால்டோ பாதுகாப்பாக இருப்பதாகவும் அவரது டிரைவர் காரை ஒட்டிச் சென்றபோது விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் சமீபத்திய தகவல்கள் வெளிவந்துள்ளன.

விபத்தில் சிக்கிய கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் சூப்பர் கார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Also Read | "கட்டுனா 2 பேரையும் தான் கட்டிப்பேன்".. ஒத்தைக்காலில் நின்ன மாப்பிள்ளை.. காத்துவாக்குல ரெண்டு காதலையும் கைப்பற்றிய பலே காதலன்..!

கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து உலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்காகவும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரொனால்டோ தனது விடுமுறை நாட்களை ஸ்பெயின் நாட்டில் உள்ள மல்லோர்கா பகுதியில் அமைந்துள்ள தனது மாளிகையில் கழிப்பது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் மல்லோர்கா சென்ற ரொனால்டோ, தனது சூப்பர் காரான புகாட்டி வெய்ரானை அங்கே நிறுத்தியிருக்கிறார்.

அதிர்ச்சி

இந்நிலையில் ரொனால்டோவின் 2.1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (இந்திய மதிப்பில் 17 கோடி) புகாட்டி வெய்ரான் நேற்று ஒரு வீட்டின் சுவரில் மோதியதாக தகவல்கள் வெளியாகின. பால்மா டி மஜோர்காவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த கார் மோதியதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ரொனால்டோவின் டிரைவர் காரை ஒட்டிச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

Cristiano Ronaldo Bugatti Veyron met Accident

டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் வீட்டு சுவரின் மீது மோதியதாகவும், காரில் டிரைவர் மட்டுமே அப்போது இருந்ததாகவும் ரொனால்டோ பாதுகாப்பாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சேதம்

இந்நிலையில் ரொனால்டோவின் டிரைவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், காரில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், சம்பவம் நடைபெற்ற உடனே கார் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 

சொகுசு கார்களின் காதலரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகின் முன்னணி கார்கள் மற்றும் விலையுயர்ந்த கார்களை வாங்க ஆர்வம் காட்டுபவர். தனது வீட்டில் உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த கார்களை பாதுகாத்து வருகிறார் ரொனால்டோ.

இந்நிலையில், ரொனால்டோவின் சூப்பர் கார் விபத்துக்குள்ளான தகவல்கள் வெளியானது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read |  "இனி எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது".. பெண்ணாக மாறிய எலான் மஸ்கின் மகன் கொடுத்த மனு..!

CRISTIANO RONALDO, BUGATTI VEYRON, ACCIDENT, CRISTIANO RONALDO BUGATTI VEYRON

மற்ற செய்திகள்