VIDEO: வருண் ஆடிய ‘காதல்’ கிரிக்கெட்.. பொருத்தமான பேக்ரவுண்ட் ‘சாங்’.. வைரலாகும் ‘க்யூட்’ வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தனது நீண்ட கால தோழியை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வருண் சக்கரவர்த்தி விளையாடினார். தமிழகத்தை சேர்ந்தவரான இவர், தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதனை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றிருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. இந்நிலையில் தனது நீண்ட நாள் தோழியை வருண் சக்கரவர்த்தி நேற்று திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
Indian cricketer #VarunChakravarthy got married today! Wish you a happy married life @chakaravarthy29 bro, soon yours talent reflects in team India @BCCI @IPL @KKRiders @DineshKarthik @TNPremierLeague pic.twitter.com/QSQtsRNTS4
— vengat raman (@vengat_JVR23) December 11, 2020
அப்போது தனிஒருவன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘காதல் கிரிக்கெட்’ பாடலின் பின்னணியில், தனது மனைவிக்கு வருண் சக்கரவர்த்தி பந்து வீசி விளையாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் வருண் சக்கரவர்த்திக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Indian cricketer Varun Chakravarthy marriage pics #VarunChakaravarthy #AUSAvIND #AUSvIND @chakaravarthy29 pic.twitter.com/9xX420NCJh
— vengat raman (@vengat_JVR23) December 11, 2020
மற்ற செய்திகள்