ஷேன் வார்ன் சாகுறதுக்கு 8 மணி நேரம் முன்ன கில்கிறிஸ்டுக்கு அனுப்பிய கடைசி மெசேஜ்! நெகிழ்ச்சியான சம்பவம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்டர் ஆடம் கில்கிறிஸ்ட், சக வீரரும் முன்னாள் வீரருமான ஷேன் வார்ன் இறப்பதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பு, அவருடன் உரையாடிய செய்தியை பகிர்ந்தார்.
தாய்லாந்தில் உள்ள தனது ரிசார்ட் அறையில் வார்னே சமீபத்தில் உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நவீன சுழற்பந்து வீச்சில் புரட்சியை ஏற்படுத்திய முன்னாள் ஜாம்பவான் வார்னேக்கு கில்கிறிஸ்ட் புகழ் அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து பகிர்ந்த கில்லி, “நான் ஷேனிடம் ஒரு வாரத்திற்கு முன்பு பேசினேன். நான் அவரிடமிருந்து ஒரு நல்ல உரையைப் பெற்றேன். அனேகமாக, அவர் இறப்பதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பு என்று நான் கருதுகிறேன். அவர் எனக்கு ஒரு செய்தியை மட்டும் அனுப்பினார்.
என்னை சர்ச் என்று தொடர்ந்து அழைத்த சிலரில் அவரும் ஒருவர். இது என உள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த புனைப்பெயர் - சில ரசிகர்கள் என்னை 'எரிக் கில்சர்ச்' என்று அழைத்தனர். ஆனால் அவர் எப்போதும் என்னை 'சர்ச்சி' என்று அழைத்தார், அது எப்போதும் ஒரு நண்பரின் அன்பான வார்த்தையாகவே உணர்ந்தேன்.
"சர்ச், ராட் மார்ஷுக்கு அற்புதமான அஞ்சலி" என்று அவர் எனக்கு செய்தி அனுப்பினார். அதுவே கடைசி தொடர்பு. இது நான் ஒருபோதும் நீக்காத குறுஞ்செய்தி” வார்னுடன் இணைந்து ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நல்ல நேரங்களைப் பற்றிப் பேசிய கில்கிறிஸ்ட், தனக்கு பல நினைவுகள் இருப்பதாகவும் ஆனால் ஸ்டம்புகளுக்குப் பின்னால் கையுறை அணிந்து இருப்பதை விட, ரசிகனாக வார்னே சிறப்பாக செயல்படுவதை பார்த்துக் கொண்டிருப்பதை விட சிறந்தது எதுவுமில்லை" என்று குறிப்பிட்டார்.
ஷேன் வார்னின் உயிரிழப்புக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும், ஷேன் வார்னுடனான நினைவுகளை பகிர்ந்து அவருக்கு புகழஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்