நம்ம ரோஹித்தா இது?.. மச்சான் கல்யாணத்தில் தாறுமாறு ஸ்டெப் போட்ட ரோஹித் ஷர்மா.. வைரலாகும் வீடியோ.!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது மனைவியுடன் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

நம்ம ரோஹித்தா இது?.. மச்சான் கல்யாணத்தில் தாறுமாறு ஸ்டெப் போட்ட ரோஹித் ஷர்மா.. வைரலாகும் வீடியோ.!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | கொளுத்தும் வெயில்.. இந்த 3 மணி நேரம் வெளியே வராதீங்க... அரசின் அட்வைஸ்.. வேதர்மேன் சொன்ன குட்நியூஸ்..!

ரோஹித் ஷர்மா

ரசிகர்களால் ஹிட் மேன் என அழைக்கப்படும் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் பலனாக உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் துவங்கி உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்த இருக்கிறார். ஓய்வில் இருக்கும் ரோஹித் ஷர்மா கடைசி இரு ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை தங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Cricketer Rohit Sharma dance at his Brother in law wedding video

Images are subject to © copyright to their respective owners.

வீடியோ

இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகாவுடைய சகோதரர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதில் குடும்பத்தினருடன் கலந்துகொண்ட ரோஹித் ஷர்மா தனது மனைவியுடன் மேடையில் நடனமாடியிருக்கிறார். பிரபல பாலிவுட் பாடலான Lal Ghagra-வுக்கு இருவரும் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Cricketer Rohit Sharma dance at his Brother in law wedding video

Images are subject to © copyright to their respective owners.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் : ஷுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், உம்ரான் மாலிக், ஜெயதேவ் உனட்கட்.

Also Read | "சேம்பியன் மீண்டு வருவான்"... ரிஷப் பண்டை சந்தித்த லெஜெண்ட் யுவராஜ்.. வைரலாகும் புகைப்படம்..!

ROHIT SHARMA, ROHIT SHARMA DANCE, WEDDING FUNCTION

மற்ற செய்திகள்