"யாரோ எடிட் பண்ணிட்டாங்க".. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வச்ச பிரித்வி ஷா.. என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி வீரரான ப்ரித்வி ஷா, நேற்று சோசியல் மீடியாவில் வைரலான புகைப்படத்தை தான் பகிரவில்லை எனவும் அதனை யாரோ எடிட் செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனாக வலம் வருபவர் ப்ரித்வி ஷா. மிக இளம் வயதிலேயே முதல்தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை பிரித்வி படைத்திருந்தார். அறிமுகமான முதல் ரஞ்சி மற்றும் துலீப் கோப்பை போட்டியிலேயே சதமடித்து ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடித்தவர். அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தினார் பிரித்வி ஷா. அதில் இந்தியா கோப்பையையும் வென்றிருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
இதனையடுத்து இந்திய அணியில் வலுவான வீரராக பிரித்வி ஷா இருப்பார் என பரவலாக பேசப்பட்டது. இருப்பினும், அடுத்தடுத்து காயங்கள் ஏற்பட்ட நிலையில் இந்திய அணியில் அவர் தொடர்ந்து விளையாட முடியாத சூழ்நிலையே உள்ளது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் பிரித்வி ஷா ஓப்பனிங் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடக்கூடியவர். சமீபத்திய நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டிருந்தாலும் அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இது அவரது ரசிகர்களை சோகமடைய செய்திருந்தது.
இந்த சூழ்நிலையில் காதலர் தினமான நேற்று பிரித்வி ஷா, இளம்பெண் ஒருவருடன் நிற்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலானது. இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகவே, பலரும் இதுகுறித்து கமெண்ட் செய்தும் வந்தனர். இந்த சூழ்நிலையில் அதனை மறுத்திருக்கிறார் பிரித்வி. மேலும், அந்த புகைப்படத்தை யாரோ எடிட் செய்து பகிர்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இதுகுறித்து பிரித்வி ஷா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரியில்,"யாரோ எனது புகைப்படங்களை எடிட் செய்து பரப்பி இருக்கின்றனர். நான் அதுபோன்ற புகைப்படத்தை எனது ஸ்டோரியில் பகிரவில்லை. ஆகவே டேக் மற்றும் மெசேஜ்களை புறக்கணிக்கவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | "சிங்கிள்ஸ்க்கு வணக்கம்"... வைரலாகும் அமைச்சரின் ஜாலி பதிவு.. ஆர்வமான முரட்டு சிங்கிள்ஸ்..!
மற்ற செய்திகள்