வாழ்த்துக்கள் 'புதுமாப்பிள்ளை'.. நீண்டநாள் காதலியை 'மணந்த' இளம்வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விஜய் ஹசாரே போட்டியில் கர்நாடக அணியின் முக்கிய வீரராகவும், ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருபவர் மனிஷ் பாண்டே. இந்திய கிரிக்கெட்  அணியின் இளம் வீரர்களில் ஒருவரான இவருக்கும், பிரபல தென்னிந்திய நடிகையான அஷ்ரிதா ஷெட்டிக்கும் இன்று இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

வாழ்த்துக்கள் 'புதுமாப்பிள்ளை'.. நீண்டநாள் காதலியை 'மணந்த' இளம்வீரர்!

நேற்று நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப்போட்டியில், மனிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணி, தமிழக அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்தநிலையில் இன்று தன்னுடைய நீண்டகால காதலியும், நடிகையுமான அஷ்ரிதா ஷெட்டியை மனிஷ் பாண்டே கரம்பிடித்தார். அஷ்ரிதா ஷெட்டி தமிழில் உதயம் NH4, இந்திரஜித், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Rab Ne Bana Di Jodi 😍❤ @manishpandeyinsta @ashritashetty_ Congratulations to you both! Have a great wedding full of precious moments which will stay with you forever.❤🙈

A post shared by Manish pandey FC🇮🇳 Ⓜ️🅿️ (@manish_addicted9insta) on

பாரம்பரிய முறைப்படி மும்பையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இருவீட்டு உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஒருசில கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இந்த செய்தியை வெளியிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி,'' அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, நிறைய அன்பு மனிஷ்-அஷ்ரிதா இருவருக்கும் கிடைக்க வாழ்த்துகிறோம்,''  என தெரிவித்துள்ளது.

தொடர்ந்து தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 6-ம் தேதி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் மனிஷ் பாண்டே கலந்து கொள்கிறார். இதுகுறித்து நேற்று அவர் அளித்த பேட்டியில்,'' இந்திய அணியின் தொடருக்காக காத்திருப்பதாகவும், அதற்கு முன்னர் தன்னுடைய திருமணத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும்,'' தெரிவித்துள்ளார்.

வாழ்த்துக்கள் மனிஷ்-அஷ்ரிதா...