பதவியை புடுங்கிட்டாங்க.. KL ராகுலுக்கு அதிர்ச்சி அளித்த BCCI.. இலங்கை தொடருக்கு புதிய துணைக் கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 2023 ஆம் ஆண்டினை பல மாற்றங்களுடன் துவங்கியுள்ளது.

பதவியை புடுங்கிட்டாங்க.. KL ராகுலுக்கு அதிர்ச்சி அளித்த BCCI.. இலங்கை தொடருக்கு புதிய துணைக் கேப்டன்!

Also Read | முதல் ஐபிஎல் ஏலத்தில் தோனி செஞ்ச சம்பவம்.. 15 வருசமா தொட முடியாத ரெக்கார்டு.. மிரண்டு போன ரசிகர்கள்!!

புதிய ஆண்டு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் வரும் ஆண்டு முழுவதும் பல முக்கிய போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. 2023 ஆம் ஆண்டில், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 13வது பதிப்பை இந்தியா நடத்துகிறது, மேலும் ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டி, பார்டர்-கவாஸ்கர் டிராபி போன்ற முக்கிய தொடர்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது.

இலங்கைக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Cricketer KL Rahul Sacked from Vice Captain of Team India

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 27) வரவிருக்கும் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. இந்த தொடர் மூன்று டி20 போட்டிகளுடன் தொடங்குகிறது, மேலும் ஹர்திக் பாண்டியா 20 ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வழக்கமான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் ஆகியோருக்கு 20 ஓவர் அணியில் இடமில்லை. ஜனவரி 10 ஆம் தேதி கவுகாத்தியில் தொடங்கும் ஒருநாள் போட்டிகளில் ரோஹித் மீண்டும் அணியை கேப்டனாக வழிநடத்துவார். ஆனால் இந்த தொடரில், KL ராகுல் ODI துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Cricketer KL Rahul Sacked from Vice Captain of Team India

ராகுல், ரோஹித் இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதில் இருந்து அவருக்கு துணையாக இருந்தவர், ஆனால் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய  ஒருநாள் அணியின் புதிய துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Cricketer KL Rahul Sacked from Vice Captain of Team India

ஜனவரி 2022 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும், ஆகஸ்ட் 2022 இல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் ரோஹித் இல்லாதபோது ராகுல் இந்தியாவை வழிநடத்தினார், ஆனால் இப்போது அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக ராகுல் விளையாடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Cricketer KL Rahul Sacked from Vice Captain of Team India

ஹர்திக் இன்றுவரை ஆறு டி20 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார், ஆனால் ஒரு நாள் அணிக்கு ஒருபோதும் கேப்டனாக இருந்ததில்லை.

இந்தியா & இங்கிலாந்து இடையிலான மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் முறையே ஜனவரி 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கவுகாத்தி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும்.

Also Read | இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. லிஸ்ட்ல இடம்பெறாமல் போன நட்சத்திர வீரர்.. முழு விபரம்..!

CRICKET, KL RAHUL, VICE CAPTAIN, TEAM INDIA, SRI LANKA, BCCI, INDIA T20I AND ODI SQUADS

மற்ற செய்திகள்