VIDEO: ‘120 கி.மீ வேகத்தில் வந்த பந்து’!.. ‘ஐய்யோ! அவருக்கு என்ன ஆச்சு’.. ‘சீக்கிரம் ஓடிப்போய் பாருங்க’.. உள்ளூர் ‘கிரிக்கெட்’ போட்டியில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்து பவுலரின் தலையில் பலமாக அடித்து அவர் சுருண்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள VVIP கிரிக்கெட் அகாடமியில், கடந்த 9-ம் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த பந்து (சுமார் 120 கி.மீ வேகம்) சட்டென பவுலரின் தலையில் பலமாக அடித்தது. உடனே அந்த வீரர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் வேகமாக ஓடிச் சென்று அவரைப் பார்த்தனர். ஆனால் அவர் மயக்க நிலையில் இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், இதை அங்குள்ள ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலானதை அடுத்து, பலரும் அந்த வீரர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் காயமடைந்த அந்த வீரர், மருத்துவமனையில் சிகிச்சை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போதுதான் தன்னுடைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை கவனித்துள்ளார். உடனே இதற்கு விளக்கமளித்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘நான் இறக்கவில்லை, உயிருடன்தான் இருக்கிறேன். நான் இறந்துவிட்டதாக வதந்தி பரவி வருகிறது. பந்து தலையில் அடித்ததும், சிறிது நேரம் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். கொஞ்சம் தலைசுற்றல், தலைவலி இருப்பதை நன்றாக உணர்கிறேன். ஆனாலும், நான் ஒரு கிரிக்கெட் வீரன், இதைக் கடந்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போது சிடி ஸ்கேன் எடுத்துள்ளேன்’ என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தனது பெயரை அவர் குறிப்பிடவில்லை.
மற்ற செய்திகள்