'பாகிஸ்தான் வீரரை அசிங்கப்படுத்திய ஐசிசி'...'அதுக்காக இந்திய வீரரை தெருவில் இழுத்துவிட்ட பாக் ரசிகர்'... முகம் சுழிக்க வைத்த செயல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐசிசி என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அது தன் உறுப்புநாடுகளின் அணியின், வீரர்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்க வேண்டும், ஆனால் ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் கடும் விமர்சனங்களை சந்தித்துவருகிறது.

'பாகிஸ்தான் வீரரை அசிங்கப்படுத்திய ஐசிசி'...'அதுக்காக இந்திய வீரரை தெருவில் இழுத்துவிட்ட பாக் ரசிகர்'... முகம் சுழிக்க வைத்த செயல்!

'ஒரு பாகிஸ்தான் வீரரைக் கிண்டல் செய்வது போல் இந்திய வீரர் ஒருவரை கிண்டல் செய்து விட முடியுமா?' என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கதறியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது, இதில் 3ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி கிளீன் பவுல்டு ஆனார். மிடில் ஸ்டம்ப் பறந்தது.

இந்தப் படத்தை ஹசன் அலியின் புரொபைல் படத்துடன் அருகே வைத்து கிண்டல் செய்துள்ளது, புரொபைல் படத்தில் ஹசன் அலி மிட்விக்கெட்டின் மேல் புல் ஷாட் ஆடுவது போன்ற ஷாட் புகைப்படத்தை வைத்துள்ளார்.

ஐசிசி என்ன செய்தது என்றால் இந்தப் புகைப்படத்துடன் நேற்று ஹசன் அலி அதே ஷாட்டில் மிடில் ஸ்டம்ப் பறந்த படத்தை வைத்து, 'உங்கள் புரொபைல் பிக்சர் Vs ஃபுல் பிக்சர்' என்று பவுல்டு ஆன படத்தை வைத்து கேலி செய்துள்ளது.

இந்த போஸ்ட் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் வைரலானது. சிலர் ஐசிசியின் ரசனைகெட்ட இந்த கிண்டலை ரசிக்க பலரும் எதிர்ப்புக் காட்டியுள்ளார்கள். ஐசிசி இப்படிச் செய்யலாமா? என்கின்றனர்.

                                   cricket twitter icc trolls pakistan hasan ali on social media back fir

இதில் ஒரு பாகிஸ்தான் ட்விட்டர்வாசி, இதே போல் விராட் கோலியின் ஷாட் ஒன்றை இடது புறம் வைத்து அதே ஷாட்டில் கோலி பவுல்டு ஆவதை வைத்து 'யுவர் புரொபைல் பிக்சர் Vs யுவர் ஃபுல் பிக்சர்' என்று கிண்டல் அடித்து ட்வீட் செய்துள்ளார்.

ஐசிசியின் அசிங்கமான ரசனைக்கு அனாவசியமாக சம்பந்தமே இல்லாமல் இந்திய வீரர் கோலி அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்