செம்ம டிமாண்டில் அந்த வீரர்!.. "எத்தனை கோடி ஆனாலும் சரி... ஆர்சிபி அவர விடவே மாட்டாங்க"!.. அடித்து சொல்லும்... முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிரபல முன்னணி கிரிக்கெட் வீரருக்காக பெங்களூர் அணி எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு செய்து ஏலத்தில் எடுக்கும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

செம்ம டிமாண்டில் அந்த வீரர்!.. "எத்தனை கோடி ஆனாலும் சரி... ஆர்சிபி அவர விடவே மாட்டாங்க"!.. அடித்து சொல்லும்... முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்த ஆண்டிற்கான 14வது ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

cricket ipl rcb will focus to get mitchell starc says aakash chopra

இதன் காரணமாக தற்போது இந்த ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்கள் மற்றும் தக்க வைக்கப்படும் வீரர்கள் என அனைத்தையும் வெளியிட்டிருந்தனர்.

அதையொட்டி, இந்த வருட ஐபிஎல் ஏலம் குறித்த செய்திகளும் தற்போது சூடு பிடிக்கத் துவங்கியுள்ளன.

இந்த ஐபிஎல் தொடரில் பலமான அணியாக இருந்தும் ஆதிக்கம் செலுத்தத் தவறிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இம்முறை முக்கிய வீரர்களை ஏலம் எடுக்க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து உமேஷ் யாதவ், கிரிஸ் மோரிஸ், இசுரு உதானா, ஆரோன் பின்ச், ஷிவம் டுபே போன்ற வீரர்களை விடுவித்து 35.7 கோடியை மிச்சப்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக இந்த ஆண்டு பல்வேறு முன்னணி வீரர்களை அந்த அணி வாங்க முயற்சிக்கும் என்று கருதப்படுகிறது. டிரேடிங் முறையில் டெல்லி அணியிடம் இருந்து டேனியல் சாம்ஸ் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோரை பெங்களூர் அணி வாங்கியுள்ளது.

cricket ipl rcb will focus to get mitchell starc says aakash chopra

இந்நிலையில், தற்போது பெங்களூரில் குறிவைக்கும் ஒரு வீரர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "பெங்களூரு அணியில் இருந்து பல முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதனை ஈடு செய்யும் விதமாக இந்த வருடம் அவர்கள் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ஏலம் எடுக்க தீவிரம் காட்டுவார்கள்.

மேலும் அவருக்காக எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் கொடுக்க கூட தயங்க மாட்டார்கள். ஏனெனில் பலமான ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் சொதப்பியதால் பல போட்டிகளை அவர்கள் இழந்து உள்ளதை நாம் கண்டுள்ளோம்.

cricket ipl rcb will focus to get mitchell starc says aakash chopra

200 ரன்களுக்கு மேல் அடித்தும் பல போட்டிகளில் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்துள்ளது இதன் காரணமாக அவர்களுக்கு டெத் ஓவர்களில் பலத்தை சேர்க்கும் விதமாக ஸ்டார்க்கை பெங்களூர் அணி 15 முதல் 19 கோடி வரை கொடுத்து வாங்கவும் தயங்காது. மேலும் இந்த முறை பெங்களூர் அணியில் எந்த குறையும் வைக்கக் கூடாது என்பதில் அந்த நிர்வாகம் உன்னிப்பாக இருக்கிறது.

இதன் காரணமாக முக்கிய வீரர்களை அந்த அணி நிச்சயம் வாங்கும்" என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்