‘ஐபிஎல் 2020 ரிசல்ட் என்ன ஆச்சு?’.. கூகுளில் தேடிய கிரிக்கெட் ரசிகர்கள்.. வாயைப் பிளக்க வைத்த கூகுள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2020 ஐபிஎல் இறுதிப் போட்டி ரிசல்டை கூகுளில் தேடியவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
துபாயில் வெற்றிகரமாக நடந்து முடிந்த 2020 ஐபிஎல் இறுதிப் போட்டி குறித்து பலரும் இணையத்தில் தேடி வந்தனர். ஐபிஎல், ஐபிஎல் இறுதிப் போட்டி முடிவு, மும்பை இந்தியன்ஸ், மும்பை vs டெல்லி போட்டி முடிவு என பல்வேறு விதமாக கூகுளில் தேடியவர்களுக்கு கூகுள் அளித்த இன்ப அதிர்ச்சி அனைவரையும் உறைய வைத்தது. பரபரப்பான போட்டி 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 156 ரன்கள் எடுத்ததை அடுத்து, களமிறங்கிய மும்பை அணி சேஸிங் செய்து ரோஹித் சர்மாவின் அபார ஆட்டத்தால், 18.4 ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது மும்பை அணி வெல்லும் 5வது ஐபிஎல் கோப்பை ஆகும்.
இந்நிலையில், இந்த ரிசல்ட் தொடர்பாக கூகுளில் ரசிகர்கள் தேடியபோது, கூகுள் பக்கங்களில் பட்டாசு வெடிப்பது போன்ற கிராபிக்ஸ் வடிவமைப்பு இடம் பெற்றிருந்தது. பல முறை கூகுள் இவ்வாறு வெற்றி பெறும் அணிகளை கவுரவித்தாலும், புதிய ரசிகர்களுக்கு இது ஆச்சரியத்தை அளித்தது.
ஐபிஎல் வெற்றி மட்டுமின்றி தீபாவளி வருவதையும் இது நினைவு படுத்தியது. நவம்பர் 14 அன்று உலகமெங்கும் இந்தியர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை அடுத்து, ஐபிஎல்ன் போட்டியில் மூழ்கி இருந்த ரசிகர்களுக்கு, தீபாவளி வந்துவிட்டது, அதையும் கொஞ்சம் கவனியுங்கப்பா என நினைவுபடுத்துவதாய் இந்த கூகுள் கிராபிக்ஸ் கொண்டாட்டம் அமைந்துள்ளது.
மற்ற செய்திகள்