‘தரமான சம்பவம்’... ‘யாக்கர் கிங் நடராஜனை புகழ்ந்து தள்ளிய’... ‘சர்ச்சைக்கு பெயர்போன வர்ணனையாளர்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்சைக்குரிய வகையில் பேசி வரும்  இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், தற்போது தமிழக வீரர் நடராஜனை பாராட்டியுள்ளார்.

‘தரமான சம்பவம்’... ‘யாக்கர் கிங் நடராஜனை புகழ்ந்து தள்ளிய’... ‘சர்ச்சைக்கு பெயர்போன வர்ணனையாளர்’...!!!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான, இரண்டாவது டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆடிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர் முடிவில், 5 விகெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் பௌலர்களின் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்தனர்.

தீபக் சாகர் 4 ஓவரில் 48 ரன்களும், போன ஆட்டத்தில் ரன்களை கட்டுப்படுத்திய  வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 35 ரன்களும் அள்ளி கொடுத்தனர். முதல் போட்டியில் மாற்றுவீரராக களமிறங்கி மேன் ஆஃப் திமேட்ச் பெற்ற சாஹல், இந்தப்போட்டியில் அதிகப்பட்சமாக, 4 ஓவரில் ஒரு விக்கெட் எடுத்து 4 ஓவரில் 51 ரன்கள் கொடுத்தார். ஷர்துல் தாக்கூர் ஒரு விக்கெட் எடுத்து 4 ஓவரில் 39 ரன்கள் கொடுத்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி இமாலய ரன்களை குவித்தது.

Cricket fraternity praises T Natarajan for economical bowling in T20

இன்று பவுலிங் செய்த மேற்கண்ட எல்லா வீரர்களும் ஒரு ஓவருக்கு 8-க்கும் அதிகமான ரன்களை அள்ளிக்கொடுத்தனர். ஆனால் தமிழக வீரர் நடராஜன் மட்டுமே இன்று சிறப்பாக பவுலிங் செய்து ரன்களை கட்டுப்படுத்தினார். இவர் போட்ட 4 ஓவரில், கடைசி ஓவரின் கடைசி பந்தில் மட்டுமே பவுண்டரி கொடுத்தார். மற்ற பந்துகளில் எல்லாம் சிங்கிள் செல்வதே அபூர்வமாக இருந்தது.

அதோடு 4 ஓவரில் இவர் வெறும் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அதிரடியாக ஆடிய ஹெண்ட்ரிக்கஸ் மற்றும் ஓப்பனர் ஆர்சி விக்கெட்டுகளை எடுத்தார் நடராஜன். கடந்த போட்டியிலும் நடராஜன் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். தான் அறிமுகம் ஆன ஒருநாள் போட்டியிலும் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Cricket fraternity praises T Natarajan for economical bowling in T20

இவரின் ஆட்டத்தை பார்த்து கோலியே அசந்து போய் சந்தோசத்தில் இவரை கட்டிக்கொண்டார். அதேபோல் இவருக்கு ஹர்திக் பாண்டியா தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி நம்பிக்கை கொடுத்தார்.  மேன் ஆஃப் தி மேட்ச் பட்டத்தை வெல்ல நடராஜனே சிறந்த வீரர் என்று, இன்று மேன் ஆஃப் தி மேட்ச் பட்டத்தை வென்ற ஹர்திக் பாண்ட்யா கூறி பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், மும்பை அணியில் இல்லாத வீரர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யும் சஞ்சய் மஞ்ரேக்கர், இன்று நடராஜனை பாராட்டி உள்ளார். இன்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ‘எதிரணி வீரர்கள் கிட்டத்தட்ட 200 ரன்கள் எடுத்துவிட்டனர். முதல் பவர்பிளேவில் நடராஜன் பவுலிங் செய்து பின், மீண்டும் டெத் ஓவரில் 19-வது ஓவரை வீசி வெறும் 5 ரன் ரேட் எக்கனாமி மட்டுமே வைத்துள்ளார். பவுன்சரில் விக்கெட் எடுத்துள்ளார். அந்த அளவிற்கு அந்த வீரர் சிறப்பான பவுலிங் செய்துள்ளார்’ என்று பாராட்டியுள்ளார். இதேபால், முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி உள்ளனர்.

மற்ற செய்திகள்