VIDEO: ‘என்னது இது அவரோட பவுலிங் ஆக்ஷனா..!’.. மிரண்டுபோய் நின்ற பேட்ஸ்மேன்.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅபுதாபியில் நடைபெற்று வரும் டி10 லீக் போட்டியில் கெவின் கொத்திகோடா என்ற இளம்வீரர் வித்தியாசமாக பந்துவீசி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் டி20 தொடர் போல, அபுதாபியில் டி10 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் Maratha Arabians அணியின் சார்பாக 22 வயதாக இளம் பந்துவீச்சாளர் கெவின் கொத்திகோடா விளையாடி வருகிறார். இவர் தனது வித்தியாசமான பவுலிங் ஆக்ஷன் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட் உலகில் வித்தியாசமான பவுலிங் ஆக்ஷன் கொண்ட வீரராக, தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம் இருந்தார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான பால் ஆடம்ஸ், வளைந்து வந்து வித்தியாசமான முறையில் பந்துவீசுவது அவரது ஸ்டைல். அவருக்கு பிறகு வித்தியாசமான ஸ்டைலில் பந்து வீசுபவர்கள் கிரிக்கெட் உலகில் வராமல் இருந்தனர். இப்போது பால் ஆடம்ஸை போலவே இளம்வீரர் கெவின் கொத்திகோடா பந்துவீசி வருகிறார்.
#NewFavePlayer Kevin Koththiigoda. Consonant in a blender pic.twitter.com/9EmOBFuNOW
— Paul Radley (@PaulRadley) November 16, 2019
இந்த நிலையில் Lahore Qalandars மற்றும் Maratha Arabians அணிகளுக்கு இடையேயான டி10 போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அப்போது Maratha Arabians அணியின் கெவின் கொத்திகோடா ஒரு ஓவர் வீசினார். இவரது பவுலிங் ஆக்ஷனை பார்த்த Lahore Qalandars அணி பேட்ஸ்மேன் டாம் பாண்டன் மிரண்டுபோய் அவரைப் பார்த்தார். பின்னர் அந்த ஓவரின் முடிவில் கெவின் கொத்திகோடா எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு வெளியேறினார். இலங்கை கிரிக்கெட் வீரரான கெவின் கொத்திகோடா, அபுதாபி டி10 லீக்கில் தனது வித்தியாசமான பவுலிங் ஆக்ஷன் மூலம் எதிரணி வீரர்களை திணறடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்