‘சிட்னியில் திட்டமிட்டப்படி 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா?’... ‘எழுந்துள்ள புதிய சிக்கல்’... ‘ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் யோசனை’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிட்னியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அங்கு கொரோனா பரவல் காரணமாக போட்டி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

‘சிட்னியில் திட்டமிட்டப்படி 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா?’... ‘எழுந்துள்ள புதிய சிக்கல்’... ‘ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் யோசனை’...!!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 36 ரன்களுக்கு சுருண்டு மோசமான சாதனை படைத்து தோல்வியடைந்தது.

முதல் போட்டியுடன் விராட் கோலி நாடு திரும்பியநிலையில், ரஹானே தலைமையில் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் சனிக்கிழமை அன்று தவங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  இதையடுத்து 3-வது போட்டி ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சிட்னியிலும், கடைசி 4-வது போட்டி ஜனவரி 15-ல் பிரிஸ்பேனிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிட்னி நகர் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் 3-வது டெஸ் போட்டி அங்கு திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.  இதையடுத்து மெல்போர்னிலேயே 3-வது டெஸ்ட் போட்டியை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா யோசனை செய்து வருகிறது. சிட்னியில் வரும் 7-ம் தேதிக்குள் நிலைமை கட்டுக்குள் வரும் நிலையில், அங்கேயே போட்டியை தொடரவும் திட்டமிட்டுள்ளது.

மேலும் சிட்னியில் கொரோனா பரவல் உள்ளதால் குயின்ஸ்லாந்து தன்னுடைய சிட்னிக்கான எல்லையை மூடியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி சிட்னியில் போட்டி நடந்தாலும் அங்கு இருந்து பிரிஸ்பேனில் நடைபெறும் மைதானத்திற்கு வீரர்கள் செல்வது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் 4.வது போட்டியை பிரிஸ்பேனில் நடத்துவதிலும் சந்தேகமாகியுள்ளது.

இதையடுத்து வீரர்களுக்கு விலக்கு அளிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்நிலையில் போட்டியில் விளையாடுபவர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்