VIDEO: ‘ரெண்டு துண்டாக உடைந்த பேட்’.. மிரண்டுபோன கெயில்.. யாருப்பா அந்த பவுலர்..? ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகரீபியன் லீக் கிரிக்கெட் தொடரில் கிறிஸ் கெயிலின் பேட் இரண்டு துண்டாக உடைந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் கரீபியன் டி20 லீக் போட்டி (CPL 2021) நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் அரையிறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் செயிண்ட் கிட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ் ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் செயிண்ட் கிட்ஸ் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில் (42 ரன்கள்) மற்றும் எவின் லூயிஸ் (77 ரன்கள்) களமிறங்கினர். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் பிராவோ 34 ரன்களும், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 11 ரன்களும் எடுத்தனர். இதனால் 17.5 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து செயிண்ட் கிட்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் கரீபியன் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு அந்த அணி சென்றது.
இந்த நிலையில் இப்போட்டியில் 4-வது ஓவரை கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒடியன் ஸ்மித் (Odean Smith) வீசினார். அந்த ஓவரின் 2-வது எதிர்கொண்ட கிறிஸ் கெயில் (Chris Gayle), பந்தை தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்து பட்ட வேகத்தில் பேட் இரண்டாக உடைந்தது.
Batting malFUNction for @henrygayle #GAWvSKNP #CPL21 #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/kuPgIs7DuY
— CPL T20 (@CPL) September 14, 2021
Gayle’s bat 😱😱😱 pic.twitter.com/uitvHvhxZH
— msc media (@mscmedia2) September 15, 2021
அதனால் பேட்டின் ஹேண்டிலை மட்டும் கையில் வைத்துக்கொண்டு கிறிஸ் கெயில் நின்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனிடையே நேற்று செயிண்ட் கிட்ஸ் அணிக்கும், செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்கும் இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் 3 விக்கெட் வித்தியாசத்தில் செயிண்ட் கிட்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்