"இந்த அட்வைஸ் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?..." 'மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு' போட்டியாக....'களமிறங்கிய பிசிசிஐ...'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநாடு முழுதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸூக்கு எதிராக பாதுகாத்துக்கொள்வது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டான பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கம் மூலம் ரசிகர்களுக்கு வித்தியாசமான முறையில் அட்வைஸ் அளித்துள்ளது.
இந்திய மக்கள் எப்படி கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என பிசிசிஐ சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களான மகேந்திரசிங் தோனி, விராட் கோலி உள்ளிட்டோரின் ஃபோட்டோக்களை போட்டு அதன் கீழ் சில கேப்ஷன்களை ஆலோசனைகளாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அதில் வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டும் . வெளியே செல்லக்கூடாது. அப்படி சென்றாலும் போதிய இடைவேளையை கடைபிடிக்க வேண்டும். கைகளை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டு வேலைகளில் உதவி செய்ய வேண்டும். முக்கியமாக இந்த தகவல்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். என்பது போன்ற ட்வீட்டுகளை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.
ஆலோசனைகளுக்கு பொறுத்தமான நட்சத்திர விளையாட்டு வீரர்களின் புகைப்படங்களுக்கு கீழே இந்த கேப்ஷன்கள் போடப்பட்டுள்ளதால் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
How to battle Coronavirus - A friendly Guide😎 pic.twitter.com/wbtpSMte6t
— BCCI (@BCCI) March 26, 2020
✅ Stay indoors 🏠
❌ DO NOT venture out pic.twitter.com/9AXCrOIeLG
— BCCI (@BCCI) March 26, 2020
If you HAVE to get out, maintain distance ⬅️➡️ pic.twitter.com/0EVcwlGntX
— BCCI (@BCCI) March 26, 2020
Ensure you have a clean and safe pair of hands🧤 pic.twitter.com/g2y1A6E5fu
— BCCI (@BCCI) March 26, 2020
Help with household chores 🙌 pic.twitter.com/BJApOZ99Fu
— BCCI (@BCCI) March 26, 2020
Emerge victorious together 💪 pic.twitter.com/ozzUhCheEy
— BCCI (@BCCI) March 26, 2020