‘வாழ்த்துக்கள் நட்டு’...!!! 'உங்கள அங்க மீட் பண்றேன்’...!!! 'தமிழக வீரரை பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்...!!!’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய டி20 அணியில் தமிழக வீரர் டி. நடராஜன் தேர்வானதற்கு ஆஸ்திரேலிய தொடக்க வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

‘வாழ்த்துக்கள் நட்டு’...!!! 'உங்கள அங்க மீட் பண்றேன்’...!!! 'தமிழக வீரரை பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்...!!!’

ஆஸ்திரேலியாவில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெற உள்ளன. இதற்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஐபிஎல் போட்டி இன்றுடன் முடிவடைய உள்ள நிலையல், நாளை நேராக ஆஸ்திரேலியா செல்கிறார்கள் இந்திய வீரர்கள். இந்த இந்திய அணியில், சன்ரைசர்ஸ் அணி வீரரும், தமிழகச் சேர்ந்தவருமான நடராஜன் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து வருண் சக்ரவர்த்தி விலகியுள்ளார். இதனால் தமிழக வேகப்பந்து வீச்சாளரான டி நடராஜன் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். இதற்கு முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதிலும் நடராஜன் இந்த சீசனில் பங்கு வகித்த, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது, ‘ஐபிஎல் போட்டியை நாங்கள் சரியாக ஆரம்பிக்கவில்லை.

Congratulations Nattu, I'll see you in Australia : David Warner

ஆனால் 4,5 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டபோதும் கடைசிப் பகுதியில் தொடர்ச்சியாக வெற்றிகள் பெற்றுள்ளோம். ஐபிஎல் போட்டியை முடித்த விதத்தில் எங்கள் அணி வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன். அடுத்த வருடம் இன்னும் ஒரு படி முன்னேறி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவோம். நட்டுவுக்குப் (நடராஜன்) பாராட்டுகள். உங்களை ஆஸ்திரேலியாவில் சந்திக்கிறேன்’ என்றார். இதன்மூலம் ஐபிஎல்லில் ஒரே அணியில் இருந்த இருவரும், எதிரெதிர் அணியில் சந்திக்க உள்ளனர்.

கடந்த 2017-ல் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை 3 கோடி ரூபாய்க்கு தேர்வு செய்தது பஞ்சாப் அணி. அடுத்த வருடம் சன்ரைசர்ஸ் அணி ரூபாய் 40 லட்சத்துக்கு தேர்வு செய்தது. இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசி அனைவரும் கவனத்தையும் கவர்ந்தார் நடராஜன். ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Congratulations Nattu, I'll see you in Australia : David Warner

இந்த தொடரில், ரசல், கோலி, தோனி, ஏபிடி வில்லியர்ஸ் என்று முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை நடராஜன் எடுத்துள்ளார். இவரின் பவுலிங்கில் ஜாம்பவான் வீரர்களே ஆட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவரின் திறமையை பார்த்து பிசிசிஐ மலைத்து போய் உள்ளது. இதனால்தான் உடனே இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. ஆகவேதான் ஸ்பின் பவுலர் வருண் சக்கரவர்த்திக்கு மாற்றாக வேறு ஸ்பின் பவுலரை எடுக்காமல், ஸ்பீட் பவுலர் நடராஜனை அணியில் எடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்