கமின்ஸ் பவுன்சரினால் 'கன்கஷன்'... புதிய விக்கெட் கீப்பர்.... 'அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டால்...' பிசிசிஐ புதிய அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கமின்ஸ் பவுன்சரில் ஹெல்மெட்டில் அடி வாங்கியதில் கன்கஷன் ஏற்பட்டு பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் சென்றுள்ள ரிஷப் பந்த்திற்குப் பதிலாக ஆந்திர விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத் சேர்க்கப்பட்டுள்ளார்.

கமின்ஸ் பவுன்சரினால் 'கன்கஷன்'... புதிய விக்கெட் கீப்பர்.... 'அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டால்...' பிசிசிஐ புதிய அறிவிப்பு...!

சஞ்சு சாம்சன், இஷான் கிஷணை நியூஸிலாந்துக்கு இந்தியா 'ஏ' அணிக்காக ஆட அனுப்பிவிட்டு கே.எஸ். பரத்தை இந்தியத் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது.

26 வயதான கே.எஸ். பரத் 74 முதல் தரப் போட்டிகளில் 4143 ரன்களை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 100க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இதற்கிடையே ரிஷப் பந்த் உடல்நிலை சரியாகிவிட்டால் 3வது ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடைபெறும் போது ரிஷப் பந்த் மீண்டும் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. கே.எஸ். பரத்தின் முதல் தர சராசரி 37.66, லிஸ்ட் ஏ சராசரி 28.14., மற்றும் டி20 சராசரி 17.08 ஆகும்.

CRICKET, RISHABHPANT, KSBHARATH