"கோலிக்கு இன்னைக்கு இருக்க பிரச்சனை சச்சினுக்கும் இருந்துச்சு".. லெஜெண்ட் டிராவிட் சொன்ன விஷயம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் குறித்து பேசியிருக்கிறார்.

"கோலிக்கு இன்னைக்கு இருக்க பிரச்சனை சச்சினுக்கும் இருந்துச்சு".. லெஜெண்ட் டிராவிட் சொன்ன விஷயம்..!

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | சமோசா விற்பனையில் தினமும் 12 லட்சம் வருமானம்..! சொந்த வீட்டை விற்று கனவை நிறைவேற்றிய பட்டதாரி தம்பதி..!

கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர்

தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.

அதற்கு பிறகு இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றபெற்றிருந்தது. இதனால் 2-1 என்ற நிலை ஏற்படவே, இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்காவது டெஸ்ட் போட்டிடிரா ஆகவே, 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி.

Coach Rahul Dravid opens up about Virat Kohli Century

Images are subject to © copyright to their respective owners.

அனல் பறந்த பேட்டிங்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்தது. அந்த அணியின் கவாஜா 180 ரன்களை குவித்திருந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியும் பேட்டிங்கில் மிரட்டியது என்றே சொல்ல வேண்டும். கில் 118 ரன்கள் எடுக்க, கோலி 186 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 571 எடுத்திருந்தது. இதனையடுத்து 91 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணியை சேஸ் செய்தது ஆஸ்திரேலிய அணி. இருப்பினும் கடைசி நாளில் அந்த அணி 175 ரன்கள் எடுக்க மேட்ச் டிரா ஆனது.

Coach Rahul Dravid opens up about Virat Kohli Century

Images are subject to © copyright to their respective owners.

டெஸ்ட் போட்டியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விராட் கோலி சதம் அடித்திருந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கோலி குறித்து பேசியிருக்கிறார். அதில்,"அவர் தனது முதல் 100 ரன்களில் ஐந்து பவுண்டரிகளை மட்டுமே அடித்தார். அவர் விரக்தியடைந்திருக்கலாம்  ஆனால், அந்த நேரத்தில் அணிக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். நல்ல வீரர்களுக்கு அது நிச்சயம் இருக்கும். எவ்வளவு பெரிய பிளேயர்களுக்கும் பணிவு இருக்க வேண்டும்.

Coach Rahul Dravid opens up about Virat Kohli Century

Images are subject to © copyright to their respective owners.

இந்தியாவில் நீங்கள் விராட் கோலியைப் போன்ற பெரிய வீரராக மாறும்போது, ​​​​மக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். நான் சச்சின் டெண்டுல்கருடன் விளையாடியபோதும், பேட்டிங் செய்தபோதும் இதை உணர்ந்திருக்கிறேன். அவர் சதம் அடிக்க வேண்டும், ரன்களை அடிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். அவர் தன்னுடைய தரத்தை நிரூபித்ததால் இந்த எதிர்பார்ப்பு அதிகமானது. சதம் அடிப்பது எவ்வளவு கடினமானது என்பதை மக்கள் உணராத அளவுக்கு அவர் தொடர்ந்து சதம் அடித்துள்ளார். இதுவே சில நேரங்களில் அழுத்தம் கொடுக்கும் விஷயமாக மாறிவிடும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Also Read | செய்யாத குற்றத்துக்கு தண்டனை.. 34 வருஷத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட நபர்.. பகீர் பின்னணி..!

CRICKET, RAHUL DRAVID, VIRAT KOHLI, VIRAT KOHLI CENTURY

மற்ற செய்திகள்