‘இதுக்கு பேர்தான் கள ஆக்ரோஷமோ?’.. ‘ஜேசன் ராயுடன் சூடான வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகப் ரியாஸ்!’.. ‘வைரல் வீடியோ!’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானின் கராச்சி நகரில் இங்கிலாந்துடன் நடந்த டி20 போட்டியின்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாகப் ரியாஸ் இங்கிலாந்தின் ஜேசன் ராயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வலம் வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் 5வது முறையாக நடந்து வருகிறது. இந்த டி20 லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஸ்லமி அணிகள் மோதிக்கொண்டன. இதில் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய இங்கிலாந்தின் ஜேசன் ராய், பெஷாவர் அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் வாகப் ரியாஸ் வீசிய பந்தை சேதப்படுத்தியதாக அளித்த புகாரை அடுத்து, கோபம் அடைந்த வாகப் ரியாஸ் ஜேசன் ராயுடன் களத்திலேயே வாக்குவாதம் செய்துள்ளார்.
நிலைமை கைமீறி போனதும் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ரஸ் உள்ளிட்ட வீரர்கள் தலையிட்டு சமநிலைக்குக் கொண்டுவந்தனர். ஆனால் ஆட்டம் முடிந்த பின்னரும் ஜேசன் ராயுடன் கை கொடுக்கும் சாக்கில் மீண்டும் வாக்குவாதம் செய்ய முயன்றுள்ளார் வாகப் ரியாஸ். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,
PcB Should Ban Wahab Riaz From PsL For This Disgusting Behavior - Jason Roy Is Our Guest 😡#WahabRiaz #QGvPZ #PSL5 #WahabRiazBan pic.twitter.com/rJhRKAQFPv
— Ameen Uddin (@AmeenUd65705980) February 22, 2020
பாகிஸ்தானுக்கு சென்று விளையாட எந்த வெளிநாட்டு அணியும் தயங்கும் சூழலில், இதுபோன்ற சம்பவங்கள் வரவேற்கத்தக்கதல்ல என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றன.