'ரன்' வேட்டை நடத்திய 'சூர்யகுமார்'.. எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த அந்த 'சம்பவம்'... 'மாஸ்' காட்டிய இங்கிலாந்து 'வீரர்'... பிரமிக்க வைக்கும் 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டி 20 போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.

'ரன்' வேட்டை நடத்திய 'சூர்யகுமார்'.. எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த அந்த 'சம்பவம்'... 'மாஸ்' காட்டிய இங்கிலாந்து 'வீரர்'... பிரமிக்க வைக்கும் 'வீடியோ'!!

அதிகபட்சமாக கேப்டன் கோலி (Kohli) 80 ரன்கள் எடுத்தார். களமிறங்கிய அனைவரும் சிறப்பாக ரன் அடித்ததால், இந்திய அணி அதிக ஸ்கோரை எட்டியது. அதிலும் குறிப்பாக, கடந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் (Suryakumar yadav), இந்த போட்டியிலும் ரன் மழை பொழிந்தார்.

கோலியுடன் இணைந்து, அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த சூர்யகுமார், ஆதில் ரஷீத் (Adil Rashid) வீசிய பந்தை, பவுண்டரியை நோக்கி வைட் லாங் ஆன் திசையில் வேகமாக அடித்தார். பந்து சற்று வேகமாக சென்றதால், பவுண்டரி கோட்டை கடந்து விடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டன், அபாரமான பீல்டிங் திறமையை செய்து காட்டினார்.

வேகமாக சென்ற பந்தை, ஒற்றைக் கையில் பிடித்த ஜோர்டன், அதனை உடனடியாக அருகே ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த ஜேசன் ராயிடம் வீசிவிட்டு, பவுண்டரி லைனுக்குள்ளே ஓடி விட்டார். யாரும் நம்ப முடியாத வகையிலான அற்புதத்தை ஜோர்டன் செய்து காட்டிய நிலையில், பந்தை பிடித்த ஜேசன் ராய், அப்போதே மைதானத்தில் சிரித்துக் கொண்டு நின்றார்.

 

இரண்டாவது அரை சதமடிக்கும் வாய்ப்பு, அற்புதமான ஃபீல்டிங் திறமையால் சூர்யகுமாருக்கு பறிபோன நிலையில், ஜோர்டனின் அசாத்திய செயல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்