VIDEO : "'கோலி'க்கு 'ஜாலி' மிரட்டல்,,.. 'யுவராஜ்'க்கு செம 'கலாய்'... எல்லாரையும் மொத்தமா வெச்சு செஞ்ச 'கெயில்'... 'அப்படி அந்த 'மனுஷன்' என்னத்த தான் சொன்னாரு??'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக, ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், 13 ஆவது சீஸனின் மூன்றாம் நாளான இன்று விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடி வரும் கிறிஸ் கெயில், பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி குறித்தும், தனது முன்னாள் அணி வீரர் யுவராஜ் சிங் குறித்தும் ஒரு பேட்டியில் ஜாலியாக கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில் கவுரவ் கபூர், கோலி குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கெயில், 'கோலி ஒரு சிறந்த வீரர். பெங்களூர் அணிக்காக ஆடிய போது நானும், கோலியும் பல அழகான தருணங்களை கழித்துள்ளோம். ஆனால், தற்போது நானும் அவரும் வெவ்வேறு அணியில் இருப்பதால் நான் அவருக்கு தற்போது எதிரானவன். போட்டியின் போது எனதருகே அவர் வந்தால் எனது முழங்கை கொண்டு தள்ளி விடுவேன்' என சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
கோலியுடன் மைதானத்தில் ஆடும் நடன அசைவுகள் குறித்தும் மகிழ்ச்சியாக கெயில் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, யுவராஜ் சிங் குறித்தும் அழகிய தருணங்களை கெயில் பேசிய நிலையில், கவுரவ் கபூர் யார் சிறந்த பவுலர்?, யுவராஜ் சிங்கா அல்லது கெயிலா என்ற கேள்வியை எழுப்பினார். கோலியை கலாய்த்து பதில் சொன்னது போலவே யுவராஜ் சிங்கையும் விட்டு வைக்காமல் கெயில் பதில் சொன்னார். 'உண்மையாக யுவராஜ் சிங் பந்து வீச்சாளாரா?' என சிரித்துக் கொண்டே கூறினார். அத்துடன் புனே அணிக்கு எதிராக கெயில் 175 ரன்கள் குவித்த போது எதிரணியில் இருந்த யுவராஜ் சிங் பற்றிக் கூறினார்.
'அந்த போட்டியில் புனே அணியின் கேப்டன் பிஞ்ச், யுவராஜ் சிங்கிடம் பந்து வீசக் கூறினார். ஆனால், நான் களத்தில் இருந்ததால் யுவராஜ் சிங் பந்து வீச மறுத்தார். இதனால் பிஞ்ச் பந்து வீசினார்' என கெயில் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்