இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை உண்டு பண்ணிய சேத்தன் சர்மா விவகாரம்.. திடீர்ன்னு எடுத்த பரபர முடிவு!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை உண்டு பண்ணிய சேத்தன் சர்மா விவகாரம்.. திடீர்ன்னு எடுத்த பரபர முடிவு!!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "ஆர்டர் செஞ்சது 12,000 ரூபா டூத் ப்ரஷ், ஆனா பார்சல்ல வந்தது..".. பெண் வாடிக்கையாளரின் வைரல் Tweet.!

இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.

முதல் போட்டியில் முழுக்க முழுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இருந்த சூழலில், ஆஸ்திரேலியா அணி ரன் அடிக்க தடுமாற்றம் கண்டிருந்ததால் போட்டியும் மூன்றாவது நாளிலேயே முடிவடைந்து இந்திய அணி வெற்றியும் பெற்றிருந்தது. முதல் போட்டி தோல்விக்கு நிச்சியம் பதிலடி கொடுக்க வேண்டுமென ஆஸ்திரேலிய அணியும், மறுபுறம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் முன்னேறுவதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்திய அணியும் களமிறங்கி உள்ளதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Chetan Sharma resigned from chief selector post reportedly

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு மத்தியில், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா குறித்த கருத்துக்கள் தான் கடந்த சில தினங்களாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தது.

இந்திய அணி குறித்து ஏராளமான கருத்துக்களை அவர் தெரிவித்ததாக செய்தி பரவி பெரிய அளவில் பிசிசிஐ வட்டாரத்தில் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இந்திய கிரிக்கெட் வட்டாரத்திற்குள் இருக்கும் கருத்துக்களை வெளியே தெரிவிக்க கூடாது என்ற சூழலில் அவர் தெரிவித்து இருந்ததாகவும் கூறி அதிக சலசலப்பை இந்த நிகழ்வு உண்டு பண்ண தற்போது தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து சேத்தன் சர்மா ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Chetan Sharma resigned from chief selector post reportedly

Images are subject to © copyright to their respective owners.

அதே போல தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சேத்தன் சர்மா கொடுத்த ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ தரப்பில் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | கணவர் இழப்பால் கதறித் துடித்த மனைவி.. அழுதுகிட்டு இருக்கும் போதே பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

CRICKET, CHETAN SHARMA, RESIGN, CHIEF SELECTOR POST

மற்ற செய்திகள்