Kadaisi Vivasayi Others

IPL AUCTION 2022- ஐபிஎல் ஏலம்: எங்களுக்கு அவர் தான் வேணும்... ஏலத்தில் அடம் பிடித்த CSK! போட்டி போட்ட SRH... ஆனால் கடைசில நடந்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூர்: ஐபிஎல் மெகா ஏலம், தற்போது பெங்களூரில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

IPL AUCTION 2022- ஐபிஎல் ஏலம்: எங்களுக்கு அவர் தான் வேணும்... ஏலத்தில் அடம் பிடித்த CSK! போட்டி போட்ட SRH... ஆனால் கடைசில நடந்த சம்பவம்!

IPL AUCTION: கோலாகலமாக தொடங்கி சூடு பிடித்த ஐபிஎல் ஏலம்! 10 அணிகளும் மும்முரம்... முழு தகவல்

பல வீரர்களும், எதிர்பார்க்காத அணியில் ஏலம் போக, தங்களின் விருப்பப்பட்ட வீரர்கள், எந்த அணியில் இடம்பெறுவார்கள் என்பது பற்றியும், ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர்.   இன்று தொடங்கிய மெகா ஏலத்தின் முதல் குரூப்பில்10 வீரர்கள் எடுக்கப்பட்டனர். அதனை அடுத்து தொடங்கிய இரண்டாவது குரூப்பில், ஏலம் நடத்தியவர் திடீரென மயங்கி விழ,சிறிது நேரத்திற்கு ஐபிஎல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

ஷ்ரேயாஸ் ஐயர் 12.25 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். தீபக் ஹூடா 5.75 கோடிக்கு லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ஹர்ஷல் பட்டேல் பெங்களூர் அணியால் 10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.ஜேசன் ஹோல்டரை லக்னோ அணி 8.75 கோடி ஏலம் எடுத்தது. நிதிஷ் ராணா கொல்கத்தா அணியால் 8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.  பிராவோ மீண்டும் 4.40 கோடிக்கு சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். தேவ்தத் படிக்கலை 7.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஜேசன் ராயை 2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.

Chennai Super kings vs Sunrisers Hyderabad for Ambati Rayudu

ஷிம்ரன் ஹெட்மயர் 8.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது. மனீஷ் பண்டே 4.6 கோடிக்கு லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். டேவிட் வார்னர் டெல்லி அணியால் 6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். லக்னோ அணி குயின்டன் டி காக்கை 6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. முகமது ஷமியை குஜராத் டைட்டன்ஸ் அணி 6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. ட்ரெண்ட் போல்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். பேட் கம்மின்ஸ் மீண்டும் கொல்கத்தா அணி 7.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

Chennai Super kings vs Sunrisers Hyderabad for Ambati Rayudu

15.25 கோடிக்கு இஷான் கிஷன் மும்பை அணியால் மீண்டும் ஏலத்தில் தக்கவைக்கப்பட்டார். அதேபோல் அம்பதி ராயுடுவை சென்னை அணி 6.75 கோடிக்கு மீண்டும் ஏலத்தில் எடுத்தது. சென்னை அணியுடன், ஐத்ராபாத் அணி கடுமையாக ஏலத்தில் மோதின. அமபதி ராயுடு ஆந்திரவை சார்ந்தவர் என்பதால் லோக்கல் அணியான ஐதராபாத் அணி அவரை ஏலத்தில் எடுக்க முயன்றது. கடைசி வரை விட்டுத்தராமல் 6.75 கோடிக்கு சென்னை அணி ராயுடுவை வாங்கியுள்ளது.

Chennai Super kings vs Sunrisers Hyderabad for Ambati Rayudu

 

Chennai Super kings vs Sunrisers Hyderabad for Ambati Rayudu

லீவு கேட்ட மாணவனை Parents ஐ கூட்டிட்டு வரச்சொன்னாரே.. விருதுநகர் கலெக்டர்.. இவரா இப்படி!

CHENNAI SUPER KINGS, SUNRISERS HYDERABAD, AMBATI RAYUDU, CSK, ஐபிஎல், ஐபிஎல் மெகா ஏலம், ஷ்ரேயாஸ் ஐயர், IPL MEGA AUCTION 2022

மற்ற செய்திகள்