IPL போட்டிகளில் முதல்முறையாக களமிறங்கும் சச்சின் மகன்.. அதுவும் CSK -க்கு எதிராவா? செம்ம பிளான்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை: சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இன்றைய ஐபில் போட்டியில் முதல் முறையாக விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

IPL போட்டிகளில் முதல்முறையாக களமிறங்கும் சச்சின் மகன்.. அதுவும் CSK -க்கு எதிராவா? செம்ம பிளான்

Also Read | “பெட்டியை உடனே திறந்திராதீங்க”.. இரிடியம் என நம்பி திறந்த முதியவர்.. ஆனா உள்ள என்ன இருந்தது தெரியுமா?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான போட்டிக்கு முன்னதாக பயிசியின் போது அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு பேட்ஸ்மேனின் ஸ்டம்பை யார்க்கர் வீசி காலி செய்தார். இந்த வீடியோவை மும்பை அணி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆன அர்ஜூன் இதுவரை ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை, ஆனால் விரைவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு ஆல்-ரவுண்டர் ஆவார்.

Chennai Super Kings vs Mumbai Indians Arjun Tendulkar Debut

அர்ஜுன் சில வருடங்களாக MI அணி உடன் இருக்கிறார். ஐபிஎல் 2021 ஏலத்தில் ரூ 20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பு அவர் மும்பை அணியின் நெட் பந்துவீச்சாளராக செயல்பட்டார். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியும் அவரை வாங்க ஆர்வம் காட்டியது. இருப்பினும், அர்ஜுன் டெண்டுல்கரை ரூ. 30 லட்சத்திற்கு MI அணி மீண்டும் ஏலத்தில் எடுத்தது.

Chennai Super Kings vs Mumbai Indians Arjun Tendulkar Debut

22 வயதான அர்ஜூன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் லெவன் அணியில் இடம் பெறவில்லை. ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர, மற்ற MI வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த சீசனில் விக்கெட் எடுக்க சிரமப்படுகின்றனர். இதனால் அர்ஜூன் இன்றைய போட்டியில் விளையாட அதிக வாய்ப்புள்ளது. மேலும் அர்ஜுன் விளையாடும் XI இல் இடம்பிடிக்க அவருடைய ஆல்ரவுண்டர் திறமையும் முக்கிய காரணமாக அமையும்.

Chennai Super Kings vs Mumbai Indians Arjun Tendulkar Debut

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022ல் மோசமான இரு அணிகளுக்கிடையேயான போட்டியாக இன்றைய போட்டி இருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதும் லீக் ஆட்டம் டெலிவிஷன் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Super Kings vs Mumbai Indians Arjun Tendulkar Debut

சிஎஸ்கே 6 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்று 9வது இடத்தைப் பிடித்துள்ளது

Also Read | “IPL அம்பயருக்கு என்னதான் ஆச்சு?”.. விளாசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.. சர்ச்சையில் முடிந்த RCB vs LSG மேட்ச்..!

CRICKET, IPL, SACHIN TENDULKAR, ARJUN TENDULKAR, CHENNAI SUPER KINGS, MUMBAI INDIANS, CSK VS MI

மற்ற செய்திகள்