தீபக் சஹார் & பென் ஸ்டோக்ஸ்-க்கு காயம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட அறிக்கை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தீபக் சஹார் மற்றும் பென் ஸ்டோக்ஸ் குறித்து சென்னை நிர்வாகம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தீபக் சஹார் & பென் ஸ்டோக்ஸ்-க்கு காயம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட அறிக்கை..!

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இதில் குஜராத் வெற்றி பெற்றது.

இதையடுத்து சென்னையில் லக்னோவை எதிர்கொண்டது CSK. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது. இந்த நிலையில் நேற்று வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதன் பலனாக அந்த அணி 20 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து சென்னை அணி சேஸிங்கில் இறங்கியது. கான்வே டக்கில் வெளியேறி அதிர்ச்சி அளித்தாலும் அடுத்துவந்த ரஹானே மும்பை பவுலர்களை அலறவிட்டார். 27 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களை குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடக்கம். மற்றொருபுறம் ருதுராஜ் நிதானமாக ஆட, அவருடன் கரம்கோர்த்த ராயுடு அணியினை வெற்றிபெற செய்தார். 18.1 ஓவரில் சென்னை வெற்றி இலக்கை எட்டியது.

இந்தப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. போட்டியின் போது தீபக் சஹார் காயமடைந்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில்,"மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 8) மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் கால் விரலில் ஏற்பட்ட சிறிய காயத்தால் அவர் வெளியேறினார். இதே போட்டியின்போது போது தீபக் சாஹரின் தொடை தசையில் காயம் ஏற்பட்டது. இதனால் களத்தில் இருந்து அவர் வெளியேறினார். அணி சென்னை திரும்பியதும் காயத்தின் அளவை அடையாளம் காண சாஹர் ஸ்கேன் செய்யப்படுவார். சென்னை சூப்பர் கிங்ஸ் மருத்துவ ஊழியர்கள் இரு வீரர்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

CSK, BEN STOKES, DEEPAK CHAHAR

மற்ற செய்திகள்