‘சூப்பர் டூப்பர் 7’... ‘சிங்கத்தின் குகை’... சென்னை தினத்துக்கு... 'சிஎஸ்கேவின் வைரல் ட்வீட்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380-ம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அந்த அணி வீரர்களின், சென்னை உடனான நினைவலைகளை பகிர்ந்துள்ளது.

‘சூப்பர் டூப்பர் 7’... ‘சிங்கத்தின் குகை’... சென்னை தினத்துக்கு... 'சிஎஸ்கேவின் வைரல் ட்வீட்'!

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, தற்போதுள்ள சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக, 1639 ஆகஸ்ட் 22-ல் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் நினைவாக ஆண்டுதோறும் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்றாக கருதப்படும் சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக உள்ளது. இனம், மொழி கடந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் வசிக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ‘மெட்ராஸ் டே‘ பெயரில் அந்த அணியின் வீரர்களை வைத்து, சென்னை உடனான அவர்களது நினைவலைகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில் தோனி, கடந்த வருடம் கூறியதை நினைவுப்படுத்தியுள்ளது. ‘சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது அதிகபட்ச ஸ்கோரை இங்குதான் அடித்தேன். இங்குள்ள சென்னை மக்களுடன் எனக்கு தனி பந்தம் உள்ளது. எனக்கு சென்னையின் ஸ்பைசி பிரியாணி, ஃபில்டர் காஃபி மற்றும் தென்னிந்திய உணவுகள் பிடிக்கும்’ என்று கூறியதை நினைவுப்படுத்தியுள்ளது. அதேபோல் மற்ற வீரர்களின் நினைவலைகளையும் பகிர்ந்துள்ளது.