'இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...' தோனி சம்பளத்தில் 'அதிரடி' டிவிஸ்ட்...! - சிஎஸ்கே தக்கவைத்த 4 வீரர்கள் யார்...?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வரும் 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் வீரர்களை தக்கவைத்து கொள்ள ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்களின் ஏலப்பட்டியல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

'இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...' தோனி சம்பளத்தில் 'அதிரடி' டிவிஸ்ட்...! - சிஎஸ்கே தக்கவைத்த 4 வீரர்கள் யார்...?

2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடந்து முடிந்த சில மாதங்களுக்குள் தற்போது 2022ஆம் ஆண்டுக்கான வீரர்கள் தக்கவைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஐபிஎல் போட்டியில் இருக்கும் அணிகள் தங்கள் அணிகளில் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

மேலும் ஐபிஎல் போட்டியில் இருக்கும் அணிகள் 4 வீரர்களில் அதிகபட்சமாக 3 இந்திய வீரர்கள் மற்றும் குறைந்தபட்சமாக ஒரு அயல்நாட்டு வீரரை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

இல்லையேல் 2 இந்திய வீரர்கள் + 2 அயல்நாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் + 1 அயல்நாட்டு வீரர் என்ற ரீதியில் தக்கவைத்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது.

அதோடு அவ்வாறு தேர்ந்தெடுக்கும் வீரர்களின் ஊதியங்களை பிசிசிஐ-யே நிர்ணயித்துள்ளது. அந்த பட்டியலில் முதன்மை வீரருக்கு ரூ.16 கோடி எனவும்,  2வது வீரருக்கு ரூ.12 கோடியாகவும், 3வது வீரருக்கு ரூ.8 கோடியும், 4வது வீரருக்கு ரூ.6 கோடியும் ஊதியமாக வழங்க வேண்டும் என பிசிசிஐ கூறியுள்ளது.

இதில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் பலக்கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. சிஎஸ்கே, மும்பை உள்ளிட்ட அணிகள் 4 வீரர்களை தேர்வு செய்தநிலையில் பஞ்சாப் அணி ஒரு வீரரை கூட தக்கவைக்க விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

சிஎஸ்கே அணியில் ஒரு ட்விஸ்ட்டுன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தது தோனி அவர்களை முதன்மை வீரராக எடுப்பார்கள் என நினைத்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் இரண்டாவது வீரராக ரூ.12 கோடிக்கு தோனியை அறிவித்துள்ளனர்.

அதோடு, முதன்மை தேர்வாக சீனியர் ஆல்ரவுண்டர் ஜடேஜா அணியில் ரூ.16 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். அதோடு தோனி அவர்களின் வயது காரணமாக அவர் இரண்டாவதாக தேர்தேடுக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது.

அதோடு மூன்றாவதாக அயல்நாட்டு வீரர் தேர்வில் முதலில் ஃபாப் டூப்ளசிஸ் தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஊதியத்தில் உடன்பாடு எட்டப்படாததால் அதிலும் ஒரு ட்விஸ்ட்டாக ஃபாப் டூப்ளசிஸ்க்கு மாற்றாக மொயீன் அலியை 3-வது தேர்வாக சிஎஸ்கே தக்கவைக்க முடிவெடுத்துள்ள நிலையில் அவருக்கு ஊதியமாக ரூ.8 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சிஸ்கே அதிரடி ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆறு கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

CSK, MSDHONI, CHENNAI SUPER KINGS, DHONI

மற்ற செய்திகள்