அவர்கிட்ட அப்டி ‘என்ன தான்’ இருக்கு.. அந்த இளம்வீரருக்கு ‘சான்ஸ்’ கொடுத்திருக்கலாமே.. கொதிக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் கேதர் ஜாதவ் இணையத்தில் வைராகி வருகிறார்.

அவர்கிட்ட அப்டி ‘என்ன தான்’ இருக்கு.. அந்த இளம்வீரருக்கு ‘சான்ஸ்’ கொடுத்திருக்கலாமே.. கொதிக்கும் ரசிகர்கள்..!

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டி இன்று (17.10.2020) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Chennai Super Kings player Kedar Jadhav trending on social media

இந்த நிலையில் சென்னை அணி வீரர் கேதர் ஜாதவ் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறார். அதற்கு காரணம் இன்றைய சென்னை அணியின் ப்ளேயிங் லெவனின் அவர் இடம் பெற்றிருப்பதுதான். முன்னதாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவின் மோசமான ஆட்டத்தால் சிஎஸ்கே தோல்வியை தழுவியது.

Chennai Super Kings player Kedar Jadhav trending on social media

அப்போட்டியில் கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. அப்போது கடைசி ஓவரின் முதல் பந்தை சந்தித்த கேதர் ஜாதவ், அருகில் அடித்துவிட்டு ரன் ஓடாமல் அப்படியே நின்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அடுத்த சில போட்டிகளில் அவர் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் ஒரு போட்டியில் விளையாடினார்.

Chennai Super Kings player Kedar Jadhav trending on social media

இந்த நிலையில் இன்றைய டெல்லிக்கு எதிரான போட்டியில் ஜாதவ் மீண்டும் அணியில் எடுக்கப்பட்டிருப்பதை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் இவருக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்