‘சிஎஸ்கே-ல விளையாடுனதுக்கு அப்புறம் அப்படி ஒரு உணர்வு’!.. ‘சுட்டிக்குழந்தை’ சாம் கரன் சொன்ன சூப்பர் பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியதன் மூலம் தன்னுடைய ஆட்டத்திறன் மேம்பட்டுள்ளதாக இங்கிலாந்து வீரர் சாம் கரன் தெரிவித்துள்ளார்.

‘சிஎஸ்கே-ல விளையாடுனதுக்கு அப்புறம் அப்படி ஒரு உணர்வு’!.. ‘சுட்டிக்குழந்தை’ சாம் கரன் சொன்ன சூப்பர் பதில்..!

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 12-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து டி20 அணியில் இளம் வீரர் சாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார். சாம் கரன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஐபிஎல் குறித்தும் சிஎஸ்கே அணியில் விளையாடியது குறித்தும் பகிர்ந்துள்ளார்.

Chennai Super Kings made me a better player, Say Sam Curran

அதில்,‘கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளுக்கு பின்பு, கிரிக்கெட்டில் மேம்படுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். சிஎஸ்கே அணியில் எனக்கு வெவ்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரராகவும், 3-வது வீரராகவும் களமிறங்கினேன். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. இதனால் என் திறன் மேம்பட்டதை உணர்ந்தேன்.

Chennai Super Kings made me a better player, Say Sam Curran

ஐபிஎல் ஒரு அற்புதமான டி20 தொடர். அதுவும் இந்தியாவில் விளையாடுவது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். ரசிகர்கள் கொடுக்கும் உற்சாகம் உத்வேகத்தை கூட்டுகிறது. ஐபிஎல் தொடரை அடுத்து இந்தியாவில் டி20 உலகக்கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது. அதற்கு தயாராவதற்கு இந்த டி20 தொடர் ஒரு வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன’ என சாம் கரன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்