'தல'யோட நம்பிக்கையை காப்பாத்திட்டாங்க' ... சூழலில் சிக்கிய 'டெல்லி' !
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே இன்று 2வது தகுதிச்சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணியே இறுதி போட்டிக்கு செல்லும் என்பதால்,ரசிகர்களுக்கு இது பெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
இதனிடையே முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள்.தொடக்க வீரர் பிரித்வி ஷா 5 ரன்னில் சாஹர் பந்துவீச்சில் தனது விக்கெட்யை பறிகொடுக்க,சிறிது நேரம் களத்தில் நின்ற ஷிகர் தவான் 18 ரன்னில் நடையை கட்டினார்.இதையடுத்து முன்ரோ,கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் என விக்கெட்கள் சீட்டு கட்டை போன்று சரிந்தது.
இதனிடையே ஒரு புறம் விக்கெட்கள் சரிந்த போதும் மறுபுறம் ரிஷப் பண்ட் மட்டும் சற்று அதிரடியாக ஆடினார்.இறுதியில் ரிஷப் பண்ட்டும் 38 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.இந்நிலையில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. சாஹர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ தலா இரண்டு விக்கெட்களை சாய்த்தனர். இம்ரான் தாஹிர் ஒரு விக்கெட் எடுத்தார்.
இதனிடையே போட்டிக்கு முன்பு சுழற்பந்து வீச்சாளர்களை பெரிதும் நம்பி இருந்த தோனிக்கு அது வெகுவாக கைகொடுத்துள்ளது.இதனிடையே 148 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி தற்போது விளையாடி வருகிறது.தொடக்க வீரர்கள் தங்களது விக்கெட்டை பறிகொடுக்காமல் நிலைத்து நின்று ஆடும் பட்சத்தில், சென்னை அணி எளிதாக வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.