கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம்ம செய்தி.. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சூப்பர் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி & மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன.
கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் தொடரிலேயே வெளியேறி இருந்தது. ஆகவே, இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெய்ல் ஜெமிசன் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவின் சிசாண்டா மஹாலாவை CSK அணி தேர்வு செய்துள்ளது. அதே நேரத்தில் CSK-வின் முகேஷ் சவுத்ரியும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த சூழ்நிலையில் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் சிங் CSK அணியில் இணைந்திருக்கிறார்.
கடந்த மார்ச் 31ஆம் தேதி துவங்கிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் வைத்திருந்தால் போட்டி நடக்கும் நாளன்று சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அதிகாரப்பூர்வமாக மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு போட்டி முடிந்த பிறகு கூடுதலாக 90 நிமிடங்கள் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்