கருணாநிதி பெயரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரி கட்டிடம்.. தோனி முன்னிலையில் திறந்து வைத்த முதல்வர்..! வைரல் போட்டோஸ்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் கேலரி ஸ்டாண்டு அமைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி பெயரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரி கட்டிடம்.. தோனி முன்னிலையில் திறந்து வைத்த முதல்வர்..! வைரல் போட்டோஸ்

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | தனது மகனுடன் எமி ஜாக்சன் நடத்திய போட்டோ ஷூட்😍.. வைரலாகும் CUTE போட்டோஸ்

தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்றது. 

அதற்கு பிறகு இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றபெற்றிருந்தது. இதனால் 2-1 என்ற நிலை ஏற்படவே, இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்காவது டெஸ்ட் போட்டிடிரா ஆகவே, 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி. 

Chennai MA Chidambaram Stadium Stand Named as Karunanidhi Stand

Images are subject to © copyright to their respective owners.

இதன் பலனாக உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றிருக்கிறது. இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் துவங்கி உள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வருகிறார். ஓய்வில் இருக்கும் ரோஹித் ஷர்மா கடைசி இரு ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை தங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chennai MA Chidambaram Stadium Stand Named as Karunanidhi Stand

Images are subject to © copyright to their respective owners.

ஒருநாள் தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள், முறையே விசாகப்பட்டினம் நகரிலும்  சென்னையிலும் நடைபெற உள்ளது. மேலும் இந்தாண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின் சில ஆட்டங்களும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Chennai MA Chidambaram Stadium Stand Named as Karunanidhi Stand

Images are subject to © copyright to their respective owners.

இதற்காக மைதானத்தின் சில பகுதிகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. அதன்படி புதிதாக கட்டப்பட்ட (பழைய பெவிலியன் என்ட்) கேலரிக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

Chennai MA Chidambaram Stadium Stand Named as Karunanidhi Stand

Images are subject to © copyright to their respective owners.

இதில் தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் மற்றும் முன்னாள் ICC & இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய சேர்மன் இந்தியா சிமெண்ட் சீனிவாசன், தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். அசோக் சிகாமணி, அமைச்சர் பொன்முடியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai MA Chidambaram Stadium Stand Named as Karunanidhi Stand

Images are subject to © copyright to their respective owners.

"சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மு.கருணாநிதி மாடத்தை (Kalaignar M. Karunanidhi Stand) மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின்  திறந்து வைத்தார்". என தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | "30 வயசு ஆகிடுச்சு".. ரன்பீர் கபூருடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடிய ஆலியா பட்! Birthday Dress மட்டும் இத்தனை லட்ச ரூபாயா?!

CHENNAI MA CHIDAMBARAM STADIUM, PAVILION STAND, KARUNANIDHI STAND

மற்ற செய்திகள்