Chanderpaul : "அப்பாவுக்கு தப்பாம பொறந்த புள்ள".. டெஸ்ட் போட்டியில் மகத்தான வரலாறு படைத்த தந்தை - மகன்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில், இளம் வீரர் ஒருவர் படைத்துள்ள சாதனை தொடர்பான செய்தி, தற்போது கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Chanderpaul : "அப்பாவுக்கு தப்பாம பொறந்த புள்ள".. டெஸ்ட் போட்டியில் மகத்தான வரலாறு படைத்த தந்தை - மகன்!!

                                                                                                          Images are subject to © copyright to their respective owners

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் பகுதியாக இந்த தொடர் நடைபெறும் சூழலில், இரு அணிகளுமே இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.

இந்த நிலையில், இரு அணிகளும் மோதி இருந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. அதன்படி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிராத்வெயிட் மற்றும் தேஜ்நரைன் சந்தர்பால் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 336 ரன்கள் சேர்த்திருந்தனர். பிராத்வெயிட் 182 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுபக்கம், தேஜ்நரைன் 207 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

Chanderpaul and his son Tagenarine create history in test cricket

Images are subject to © copyright to their respective owners

இவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சந்தர்பாலின் மகன் ஆவார். டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி சாதனை படைத்துள்ளார் தேஜ்நரைன் சந்தர்பால். வெஸ்ட் இண்டீஸ் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 447 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்திருந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் ஜிம்பாப்வே அணி, 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.

இதனிடையே, இந்த போட்டியில் இளம் வீரர் தேஜ்நரைன் இரட்டைச் சதமடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை நடந்துள்ளது. அதாவது, தந்தை சந்தர்பால் மற்றும் மகன் தேஜ்நரைன் சந்தர்பால் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதமடித்துள்ளனர். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை, மகன் என இருவருமே இரட்டைச் சதமடிப்பதும் இது தான் முதல் முறை.

Chanderpaul and his son Tagenarine create history in test cricket

Images are subject to © copyright to their respective owners

கிரிக்கெட் உலகில் தலைச்சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வந்த சந்தர்பால், மொத்தம் 30 சதங்களை டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ளார். அவரை போலவே அவரது மகனும் ஆரம்ப டெஸ்ட் போட்டிகளிலேயே இரட்டை சதமடித்து பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CHANDERPAUL, TAGENARINE

மற்ற செய்திகள்