இனி வர்ற போட்டிகள்ல இந்த விஷயங்கள்லாம் கரெக்ட்டா நடந்தா CSK கண்டிப்பா PlayOff -க்கு உள்ள போய்டும்.. பக்காவான ஸ்கெட்ச்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுமா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
Also Read | அடேங்கப்பா.. காட்டில் குவிந்த கோடிக்கணக்கான மின்மினிப்பூச்சிகள்.. சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்..!
ஐபிஎல் 2022
கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ஐபிஎல் போட்டிகள் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 4 மைதானங்களில் மட்டுமே நடைபெற்றுவரும் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் பிளே ஆஃப் சுற்றுக்கு தேர்வாகப்போகும் அந்த 4 அணிகள் எவை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சமீப போட்டிகளில் அபாரமாக விளையாடி வருவதால் அந்த அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் முழுமையாக பறிபோகவில்லை என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.
தொடர் சோகம்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிற்கு வழங்கி அனைவரையும் திகைக்க வைத்தார் தோனி. ஆனால், அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக, மீண்டும் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை தோனியிடமே ஜடேஜா கொடுத்துவிட்டார். இதுவரையில் 11 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 4 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறது. ஆனாலும், சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. எப்படி என கீழே பார்க்கலாம்.
சென்னை அணி அடுத்து வர இருக்கும் மும்பை, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுடனான போட்டியில் நல்ல ரன்ரேட்டில் வெற்றிபெறவேண்டும். அதே நேரத்தில் கீழ்க்கண்டவாறு போட்டிகளின் முடிவும் அமையவேண்டும்.
வாய்ப்பு
மும்பை Vs கொல்கத்தா போட்டியில் யார் வென்றாலும் சென்னைக்கு பாதிப்பாக அமையாது.
அதேபோல லக்னோ Vs குஜராத் போட்டியிலும் யார் வென்றாலும் சென்னைக்கு பாதிப்பு இருக்காது.
RR Vs DC - ராஜஸ்தான் வெற்றிபெறவேண்டும்.
CSK Vs MI - சென்னை அதிக ரன்ரேட்டில் வெற்றிபெறவேண்டும்.
PBKS Vs RCB - பஞ்சாப் வெற்றிபெறவேண்டும்.
KKR Vs SRH - கொல்கத்தா வெற்றிபெறவேண்டும்.
CSK Vs GT - சென்னை அதிக ரன்ரேட்டில் வெற்றிபெறவேண்டும்.
LSG Vs RR - இப்போட்டியில் யார் வென்றாலும் சென்னைக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.
DC Vs PBKS - டெல்லி வெற்றிபெறவேண்டும்.
MI Vs SRH - மும்பை வெற்றிபெறவேண்டும்.
LSG Vs KKR - இப்போட்டியில் யார் வென்றாலும் சென்னைக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.
GT Vs RCB - குஜராத் வெற்றிபெறவேண்டும்.
CSK Vs RR - சென்னை அதிக ரன்ரேட்டில் வெற்றிபெறவேண்டும்.
MI Vs DC - மும்பை வெற்றிபெறவேண்டும்.
SRH Vs PBKS - ஹைதராபாத் வெற்றிபெறவேண்டும்.
இப்படி ஆட்டங்களின் முடிவு அமையும் பட்சத்தில், சென்னை மற்றும் ஹைதராபாத் அல்லது பஞ்சாப் அணிகள் தலா 14 புள்ளிகளை பெறும். அப்போது அதிக நெட் ரன்ரேட்டை கொண்டுள்ள அணி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழையும்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்