RRR Others USA

'கணவர்' எடுத்த முக்கிய விக்கெட்.. சந்தோஷத்தில் மனைவி செய்த காரியம்'.. யாருங்க இவங்க??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது நடைபெற்று வரும் 15 ஆவது ஐபிஎல் தொடர், கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி ஆரம்பமாகி இருந்தது.

'கணவர்' எடுத்த முக்கிய விக்கெட்.. சந்தோஷத்தில் மனைவி செய்த காரியம்'.. யாருங்க இவங்க??

இதுவரை 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கொல்கத்தா அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

தொடர்ந்து, இன்று நடைபெறவுள்ள போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளது.

முதல் தோல்வி

முன்னதாக, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்றிருந்த தங்களின் மூன்றாவது லீக் போட்டியில், தோல்வியை பதிவு செய்திருந்தது.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், ராஜஸ்தான் அணி வெற்றி பெறும் என்றே பலரும் கருதினர்.

பக்கா ஃபார்மில் தினேஷ் கார்த்திக்

ஆனால், கடைசி கட்டத்தில் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் சபாஷ் அகமத் ஆகியோர், அதிரடியாக ஆடி, பெங்களூர் அணியை வெற்றி பெறச் செய்தனர். தொடர்ந்து, அனைத்து போட்டிகளிலும் ஆட்டமிழக்காமல் தன்னுடைய நேர்த்தியான ஆட்டத்தை தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஆட்டத்திற்கு பலருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். மீண்டும் இந்திய அணியில் அவர் இடம் பிடிப்பாரா என்பது பற்றியும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய விக்கெட்டுகளை அள்ளிய சாஹல்

இந்நிலையில், இந்த போட்டியில் பிரபல வீரரின் மனைவி, ஆர்ப்பரித்து துள்ளிக் குதித்து கத்திய வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் டேவிட் வில்லி ஆகிய முக்கிய விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர் சாஹல் எடுத்திருந்தார்.

Chahal wife dhanashree celebrated her husband wicket

நான்கு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து, இரண்டு முக்கிய விக்கெட்டுகளை சாஹல் வீழ்த்தி அசத்தி இருந்தார். அவர் விக்கெட்டுகளை எடுத்த போது, மைதானத்தில் இருந்த அவரின் மனைவி தனஸ்ரீ வர்மா, சந்தோஷத்தில் குழந்தையை போல துள்ளிக் குதித்து கொண்டாடினார்.

சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதை விட, கணவரின் விக்கெட்டை தன்னுடைய வெற்றி போல கொண்டாடிய தனஸ்ரீயின் வீடியோக்கள் தற்போது, ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

CHAHAL, DHANASHREE, RR VS RCB, IPL 2022, தனஸ்ரீ, சாஹல்

மற்ற செய்திகள்